Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
செப்.30 - அக்.3: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே முதன் முறையாக பிங்க் பந்து பகலிரவு டெஸ்ட் போட்டி கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றது.
அக்.1: 2012 தேர்தலில் சட்டவிரோதமாக நிதி அளித்த புகாரில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
அக்.2: காதித் துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் பறக்கவிடப்பட்டது.
அக்.4: 2021-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் பட்டாபுடியான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அக்.5: கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 இனி ‘தனிப்பெருங் கருணை’ நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அக்.5: இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
அக். 6: வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் பிரிட்டனின் டேவிட் டபுள்யு.சி மேக்மில்லன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
அக்.7: இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து பத்தாம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாமிடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார்.
அக்.8: ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. டாடா நிறுவனம் தொடங்கிய ஏர் இந்தியாவை 1953-ல் மத்திய அரசு நாட்டுடமையாக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT