Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM
செப்.4: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா முதன் முறையாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. இதற்கு முன்பு 1984, 2016-ஆம் ஆண்டுகளில் தலா 4 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாகும்.
செப்.4: தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்வாழிட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 1971ஆம் ஆண்டு முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது குடிசைமாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
செப்.6: 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி முதல் தவணையைச் செலுத்திய முதல் மாநிலம் என்கிற பெயரைப் பெற்றது இமாச்சல பிரதேசம்.
செப்.7: பெரியார் ஈ.வெ. ராமசாமி பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
செப்.9: எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.9: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் நாகலாந்து ஆளுநருமான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டார்.
செப்.10: இந்திய கிரிக்கெட் அணிக்குள் கரோனா வைரஸ் பரவியதால் இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
செப்.10: பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி இனி செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி தினமாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT