Last Updated : 24 Aug, 2021 03:13 AM

 

Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

சேதி தெரியுமா?

ஆக.13: பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வதுகுரு மகாசன்னிதானமான அருணகிரி நாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் உடல் நலக் குறைவால் காலமானார்.

ஆக.14: ஆகஸ்ட் 14ஆம் தேதி தேசப் பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஆக.14: 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வானது. சிறந்த நகராட்சியாக உதகமண்டலம், பேரூராட்சியாக திருச்சியில் உள்ள கல்லக்குடி தேர்வாயின.

ஆக.15: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டுப் படைகள் விலகத் தொடங்கிய நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.

ஆக.15: நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடியும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

ஆக.15: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஆக.16: 2020ஆம் ஆண்டில் உலகின் 50 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சீனாவின் ஹோடான் முதலிடத்தையும் இந்தியாவின் காசியாபாத் இரண்டாமிடத்தையும் பிடித்தன. தூய்மையான நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜூட்புரி முதலிடத்தைப் பிடித்தது.

ஆக.18: சுடோகு எனும் புதிர் விளையாட்டை உருவாக்கிய ஜப்பானைச் சேர்ந்த மகி காஜி காலமானார். இவர், சுடோகு விளையாட்டின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

ஆக.20: உச்ச நீதிமன்றத்துக்குப் புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x