Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
ஜூலை 24: டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு இந்தியா வென்றுள்ள பதக்கம் இது.
ஜூலை 24: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் முத்துக்கலிங்கன் கிருஷ்ணனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
ஜூலை 25: ரஷ்யாவில் நடைபெற்ற ‘சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021’ போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை இந்திய மாணவர்கள் வென்றனர். இது உலகின் பழமையான அறிவியல் போட்டி.
ஜூலை 26: ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜூலை 26, 29: தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள 13-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த ராமப்பா கோயில், குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள தொன்மையான ஹரப்பா நகரான தோலாவீரா ஆகியவற்றை உலகப் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.
ஜூலை 27: தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்க ‘தகைசால் தமிழர்’ என்கிற புதிய விருதைத் தமிழக அரசு உருவாக்கியது. இதன் முதல் விருதுக்குச் சுதந்திரப் போராட்ட வீரரும் நூற்றாண்டு கண்ட இடதுசாரி தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.
ஜூலை 27: கல்விச் சேர்க்கையில் வன்னியர் களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தபட்டோருக்கு 2.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.
ஜூலை 29: கேரளத்தில் ஆண் அரசு ஊழியர்கள் திருமணத்தின்போது உயரதிகாரிகளிடம் வரதட்சிணை மறுப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
ஜூலை 30: புதுக்கோட்டையில் சங்ககால பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
ஆக.1: டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இப்போது வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாகியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT