Published : 13 Apr 2021 03:24 PM
Last Updated : 13 Apr 2021 03:24 PM
ஏப். 3: பல அடுக்குகள் கொண்ட முகக்கவசங்களை அணிவதால், நுண்துகள் பரவல் 96 சதவீதம் குறையும் என்று அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஏப். 4: இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாகத் தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டார்.
ஏப். 5: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்து 2 முறை பதவியில் நீடிப்பதற்கான மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி தலா 6 ஆண்டுகள் என 2 முறை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு வரை புதின் அதிகாரத்தில் இருக்க முடியும்.
ஏப்.6: தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 81.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஏப். 7: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதி. தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவின் பதவிக்காலம் ஏப். 23இல் நிறைவடைகிறது.
ஏப். 7: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராகப் பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப் பட்டார்.
ஏப். 8: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இடம்பிடித்தார்.
ஏப். 10: கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழகத்தில் புதிய கரோனா பொதுமுடக்கக் கட்டுப் பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT