Published : 06 Oct 2020 09:29 AM
Last Updated : 06 Oct 2020 09:29 AM
செப். 27: உடல்நலம் குன்றியிருந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை (1998), பாதுகாப்புத் துறை (2001), நிதித் துறை (2002) ஆகிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
செப். 27: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக வீராங்கனைகளை ஆட்டமிழக்கச்செய்தவர் (92 பேர்) என்ற சாதனையை ஆஸ்திரேலிய மகளிர் அணி விக்கெட்கீப்பர் பேட் அலைசா ஹியாலே படைத்தார். இவர் எம்.எஸ். தோனியின் (91 பேர்) சாதனையை முறியடித்து இச்சாதனையைப் படைத்தார்.
செப். 28: விமானப் படை லெப்டினன்ட் சிவாங்கி சிங், ரஃபேல் போர் விமானத்தை இயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் போர் விமானி எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
செப். 30: ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் நான்கு மருத்துவசாதனப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. முதல் பூங்கா கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள தொன்னக்கல்லில் அமைக்கப்படவுள்ளது.
அக். 2: தேசிய குற்றப்பதிவு அமைப்பு சார்பில் ‘இந்தியாவில் குற்றங்கள் 2019’ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2018- 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்.3: இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலி - லே இடையே 9.02 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. இதன்மூலம் மணாலி - லே இடையிலான தொலைவு 46 கி.மீ. ஆகவும் பயண நேரம் நான்கு மணி நேரமாகவும் குறையும்.
அக்.3: கரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட இ.எம்.ஐ-களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவைக் கைவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT