Published : 10 Dec 2024 12:40 PM
Last Updated : 10 Dec 2024 12:40 PM
டிச.3: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழந்த பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
டிச.3: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து படிப்படியாகவே நீர் வெளியேற்றப்பட்டதாகவும் 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
டிச.3: புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய ஆட்சிப் பகுதியான சண்டிகரில் 100 % அமலுக்கு வந்தன.
டிச.4: மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து குடியரசுத் தலைவர் ஏற்கெனவே உத்தரவிட்ட நிலையில், அந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
டிச.4: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
டிச.5: சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கிய ரோபா -3 இரட்டை செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
டிச.6: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
டிச.7: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
டிச.8: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படை கைப்பற்றிய நிலையில் அதிபர் பஷார் அல் ஆசாத் வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.
டிச.9: டங்ஸ்டன் சுரங்கத்தை மாநில அரசின் அனுமதியின்றி உரிமத்தை மத்திய அரசு ஏலம் விட்டதற்கு எதிராக தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிச.9: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த் தாஸின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT