Last Updated : 03 Dec, 2024 02:13 PM

 

Published : 03 Dec 2024 02:13 PM
Last Updated : 03 Dec 2024 02:13 PM

சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
நவ.26: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நவ.26: மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார்.

நவ.27: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தமாட்டோம் என்று மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

நவ.27: கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவர் என்று அடையாளப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவ.28: ஜார்க்கண்டின் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்பது நான்காவது முறை.

டிச.1: வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரியிலும் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்தது.

டிச.1: ஆந்திரத்தில் முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட வக்பு வாரியத்தை கலைப்பதாக மாநில அரசு அறிவித்தது.

டிச.1: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா பொறுப்பேற்றார். இப்பதவியை ஏற்ற ஐந்தாவது இந்தியர் இவர்.

டிச.1: லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை வூலுவோ யூவை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜியா ஹெங்கை வீழ்த்தி இந்தியாவின் லக்சயா சென் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இணை சீனாவின் பாவோ லிஜிங், லிகியான் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

டிச.2: ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 சிறார்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x