Published : 08 Jul 2024 12:02 PM
Last Updated : 08 Jul 2024 12:02 PM
ஜூன் 28: பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
ஜூன் 29: மேற்கிந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. 2007-க்குப் பிறகு இந்திய அணி வென்ற இரண்டாவது டி20 உலகக் கோப்பை இது.
ஜூன் 30: இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் (91) உடல் நலக் குறைவால் கொழும்புவில் காலமானார்.
ஜூன் 30: இந்திய ராணுவ தரைப்படைத் தளபதியாக உபேந்திர திவேதியும், கடற்படைத் தளபதியாக தினேஷ் திரிபாதியும் நியமிக்கப்பட்டனர்.
ஜூலை 1: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்களின்படி முதல் வழக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பதிவு செய்யப் பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் பதிவானது.
ஜூலை 1: மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு அதன் பரிந்துரைகளை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
ஜூலை 2: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 4: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூலை 5: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி 418 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஜூலை 5: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT