Published : 30 Jun 2024 08:34 AM
Last Updated : 30 Jun 2024 08:34 AM

ரோபாட்டிக்ஸ் துறையில் பயிற்சியோடு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் துறையில் சிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான பயிற்சி வழங்குவது குறித்த அறிவிப்பை தாட்கோ வெளியிட்டுள்ளது.

இதற்கான பயிற்சிக் கட்டணத்தை (ரூ.60,000) தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. மூன்று மாதங்கள் நடைபெறும் இப்பயிற்சியை நிறைவுசெய்பவர்களுக்கு ‘மாடர்ன் ரோபாட்டிக்ஸ்’ படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

தகுதி: இளங்கலையில் ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

பயிற்சி விவரம்: இப்பயிற்சியில் ரோபாட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த ஹியுமனாய்டு ரோபாட், மருத்துவத் துறையில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவும் ரோபாட்டிக்ஸும் போன்றவை தொடர்பான வகுப்புகள் எடுக்கப்படும். பயிற்சியை நிறைவுசெய்பவருக்குச் சான்றிதழும் முன்னணி ரோபாட்டிக்ஸ் நிறுவனங்களில் மாத வருமானத்தில் வேலையும் கிடைக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில், ‘Robotics Training programme’ என்கிற இணைப்பில் (https://iei.tahdco.com/rob_reg.php) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தாட்கோவின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். இதைத் தவிர, காஸ்மெட்டாலஜி பயிலரங்கு, ஃபேஷன் டிசைனிங் பயிலரங்கு, ஐஐடி பேராசிரியர்கள் வழங்கும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி, பிசியோதெரபி வகுப்பு எனப் பல்வேறு சிறப்பு வகுப்புகள் தாட்கோவில் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x