Published : 21 Nov 2023 06:06 AM
Last Updated : 21 Nov 2023 06:06 AM
இந்தியாவில் ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து, ஆஸ்திரேலியா ஆறாவது முறையாகக் கோப்பையை வென்று அசத்திவிட்டது. அணி ஆட்டமான கிரிக்கெட்டின் மூலம் நம் வாழ்க்கையில் பின்பற்ற சில விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் கிடைக்கும். அதுபோன்ற அம்சங்களை அலசுவோம்.
நிதானம் பிரதானம்: இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனான விராட் கோலி இந்த உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கிரிக்கெட்டில் விராட் கோலி என்றாலே ஆக்ரோஷம்தான். களத்தில் விரைவாகவும் துடிப்பாகவும் ரன்களைக் குவிப்பதில்தான் அவருடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த உலகக் கோப்பையில் பக்குவப்பட்ட வீரராக அவர் விளையாடியது கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தது. மூன்றாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய அவர், அணியின் தேவைக்கு ஏற்ப தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடி தன்னை நிலைநிறுத்திக்கொண்டு ஆடியதைப் பல ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT