Published : 25 Jan 2022 11:39 AM
Last Updated : 25 Jan 2022 11:39 AM
ஜன.15: இந்தியாவில் ஆண்டுதோறும் இனி ஜனவரி 16ஆம் தேதி ‘தேசிய ஸ்டார்ட்-அப் தின’மாகக் கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஜன.16: டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஏற்கெனவே டி20 போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஒரு நாள் கேப்டன் பொறுப்பிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அவரை நீக்கியது.
ஜன.17: பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. சீக்கிய மத குரு ரவிதாஸ் நினைவு நாள் பிப்.16 அன்று அனுசரிக்கப்படுவதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜன.18: சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையக் குழுவைத் தமிழக அரசு நியமித்தது. நீதிபதியைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட முதல் காவல் ஆணையம் இது. முதல் காவல் ஆணையம் 1969ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
ஜன.19: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள், சென்னைக் குடியரசு தின விழாவில் அணிவகுக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஜன.20: இங்கிலாந்தில் பிப்.27 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஜன.21: 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசு உரிமைச் சட்டத்துக்கு முன்னதாக இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தந்தைவழிச் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜன.21: இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று மத்திய சுகாதார துறை அறிவித்தது.
ஜன.21: டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா அறிவித்தார். 2003ஆம் ஆண்டில் சர்வதேசப் பயணத்தை சானியா தொடங்கினார். தற்போது அவருக்கு 35 வயது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT