Last Updated : 17 Oct, 2016 02:39 PM

 

Published : 17 Oct 2016 02:39 PM
Last Updated : 17 Oct 2016 02:39 PM

‘பேய்’ நடமாடும் வீட்டை வாங்கிவிட்டால்?

l அமெரிக்காவில் விற்பவர், வாங்குபவர் இருவர் சார்பிலும் ஒரே ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் இருப்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதற்கு அனுமதி கிடையாது. ஸ்வீடனில் ஒரு வீட்டை ஆன்லைன் மூலம் விற்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் 20 புகைப்படங்களையாவது வெளியிடுவார்கள்.

l ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல அழகிய நகரம் இன்வெர்னஸ். அதில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பிரபல ஹோட்டல் ஷோகேஸில் பல அழகிய வீடுகளின் புகைப்படங்கள் காணப்பட்டன. அவற்றின் கீழே ரத்தினச் சுருக்கமாக அவற்றைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. தெள்ளத் தெளிவாக அவற்றின் விலைகள் குறிக்கப்பட்டிருந்தன. சில புகைப்படங்களின் குறுக்கே ‘sold’ என்ற வார்த்தை காணப்பட்டது.

அந்த ஹோட்டல் வரவேற்பாளரை விசாரித்தோம். “அது எங்கள் ஹோட்டலில் நிரந்தரமாக அறை எடுத்துத் தங்கியிருக்கும் ஒரு வழக்கறிஞருடையது. அவர் ஒரு எஸ்டேட் ஏஜெண்டாகவும் இருக்கிறார்” என்றார். விசாரித்தபோது சில விவரங்கள் கிடைத்தன. ஸ்காட்லாந்தில் வழக்கறிஞர்களே எஸ்டேட் ஏஜெண்டாக இருக்க அனுமதி உண்டு (எஸ்டேட் ஏஜெண்ட் என்பவர் சொத்துக்களை வாங்கி விற்கும் பணியில் ஈடுபடுபவர்).

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டும்தான் வழக்கறிஞர்களுக்கு இந்தச் சலுகை . பிரிட்டனின் பிற பகுதிகளான இங்கிலாந்திலோ, வேல்ஸிலோ இப்படி டூ-இன்-ஒன்னாகப் பணிபுரிவது சாத்தியமில்லையாம்.

வீடுகள் வாங்குவது, விற்பது தொடர்பாக உலகெங்கும் நிலவும் சில வித்தியாசமான விவரங்கள்:

l அயர்லாந்தில் ரியல் எஸ்டேட் என்பதை ‘ப்ராபர்டி’ என்ற வார்த்தையில்தான் குறிப்பிடுகிறார்கள்.

l ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் என்பவரை Factor என்றும் குறிப்பிடுகிறார்கள்.

l ஸ்காட்லாந்தில் தங்கள் வீட்டை அடமானத்திலிருந்து முழுவதுமாக மீட்டெடுத்தால் தங்கள் வீட்டுக் கதவுக்கு சிவப்பு வண்ணம் பூசுகிறார்கள். ஆக சிவப்பு வண்ணக் கதவு வீட்டின் சொந்தக்காரர்கள் தங்களைப் பெருமையுடன் எண்ணிக் கொள்கிறார்கள்.

l ஸ்காட்லாந்தில் பார்லிமெண்ட் ஹவுஸ் என்று ஒன்று உண்டு. ஸ்காட்டிஷ் பார்லிமெண்ட் பில்டிங் என்று ஒன்று உண்டு. இரண்டில் நாடாளுமன்றம் எங்கே இயங்குகிறது? (இரண்டு கட்டிடங்களுமே ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோவில்தான் உள்ளன).

பார்லிமெண்ட் ஹவுஸ் என்பது முன்பு (அதாவது ஸ்காட்லாந்து பிரிட்டனின் ஒரு பகுதியாவதற்கு முன்பு) நாடாளுமன்றம் செயல்பட்ட கட்டிடம். அதில் இப்போது ஸ்காட்லாந்தின் உச்ச நீதிமன்றம் இயங்குகிறது. ஸ்காட்டிஷ் பார்லிமெண்ட் பில்டிங் என்பது எடின்பரோவின் மற்றொரு பகுதியான ஹாலிரூட் என்ற பகுதியில் இருக்கிறது. இங்குதான் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் இயங்குகிறது.

l ஒரு சிவப்பு க்ளிப்பைக் கொண்டு ஒருவர் ஒரு வீட்டையே வாங்க முடியுமா? நடந்திருக்கிறது.

2005ல் ஒருவர் தன்னுடைய ப்ளாக்கில் (blog) தன்னிடமிருந்த ஒரு சிவப்பு வண்ண பேப்பர் கிளிப்பின் புகைப்படத்தை வெளியிட்டார். “இதை விடப் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கிற ஏதாவது பொருளை எனக்கு அளித்தால் நான் இந்தச் சிவப்பு பேப்பர் கிளிப்பை அவருக்கு கொடுக்கத் தயார்” என்றார்.

சில நாட்கள் கழித்து மீன் வடிவில் காணப்பட்ட ஒரு பேனாவை ஒருவர் அளிக்க முன்வர, அவர் அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு தனது சிவப்பு க்ளிப்பைக் கொடுத்தார்.

சில நாட்கள் கழித்து மீன் வடிவில் காணப்பட்ட ஒரு பேனாவை ஒருவர் அளிக்க முன்வர, அவர் அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு தனது சிவப்பு க்ளிப்பைக் கொடுத்தார்.

மீண்டும் முன்பு போலவே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வித்தியாசமான ஒரு கதவுக் குமிழிக்காக (Door knob) தன்னிடமிருந்த மீன் வடிவப் பேனாவை பண்டமாற்று செய்து கொண்டார். இப்படியே 14 முறை பண்டமாற்றுகள் செய்து முடிக்க, கடைசியில் அவர் இந்த முறையினால் கனடாவிலுள்ள கிப்ளிங் நகரில் ஒரு வீட்டுக்கே சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் (?!) ஒரு வீட்டை விற்கும்போது அந்த விஷயத்தை விற்பவருக்குக் கட்டாயம் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் விஷயம் தெரியும்போது அந்த விற்பனையே செல்லாது என்று கூறும் உரிமை வீட்டை வாங்கியவருக்கு உண்டு. இங்கல்ல நியூ யார்க்கில் நம்மூரில்தான் ஒரு வீடு வாங்கவே பேயாய் அலைய வேண்டி இருக்கிறதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x