Published : 26 Dec 2015 11:58 AM
Last Updated : 26 Dec 2015 11:58 AM
நமக்குப் பிடித்த விஷயங்களில் வீடும் பயணமும் நிச்சயம் இடம்பிடிக்கும். வீடு அலுப்பு தரும்போது பயணங்களில் ஆசுவாசம் கொள்கிறோம்.
பயணம் களைப்பைத் தரும் வேளையில் வீட்டில் வந்து தஞ்சமடைகிறோம். வீட்டுக்குச் சக்கரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை நமக்கு சில நேரம் வரும். ஆனால் இதெல்லாம் நடக்கிற கதையா என்று அந்த எண்ணத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். அமெரிக்காவில் ஒருவர் இந்த எண்ணத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்.
ஆனால் ஒரு சிறு வித்தியாசம், அவர் வீட்டுக்கு சக்கரத்தைப் பொருத்தவில்லை. ஆனால் வாகனம் ஒன்றை வீடாக்கிவிட்டார். ஆகவே அந்த உருளும் வீட்டில் அவர் உற்சாகமாகப் பயணம் செய்கிறார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பேட்ரிக் ஷ்மித். அவர் தன் தந்தை உதவியுடன் ஒரு பள்ளிப் பேருந்தை விலைக்கு வாங்கி அதை அப்படியே வீடாக மாற்றிவிட்டார். 1990-ம் ஆண்டில் சந்தைக்கு வந்த ஒரு பேருந்தை, கிறித்தவ தேவாலயம் நடத்தும் ஒரு பள்ளியிலிருந்து 4,500 டாலர் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார். பின்னர் மேலும் 9,000 டாலர் பணத்தைச் செலவிட்டு அந்தப் பேருந்தை குடியிருக்கும் வீடாக மாற்றிவிட்டார். பேருந்தை வீடாக மாற்றும் ஒவ்வொரு நடவடிக்கையையும் படங்களுடன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவும்செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பேட்ரிக் ஷ்மித். அவர் தன் தந்தை உதவியுடன் ஒரு பள்ளிப் பேருந்தை விலைக்கு வாங்கி அதை அப்படியே வீடாக மாற்றிவிட்டார். 1990-ம் ஆண்டில் சந்தைக்கு வந்த ஒரு பேருந்தை, கிறித்தவ தேவாலயம் நடத்தும் ஒரு பள்ளியிலிருந்து 4,500 டாலர் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
பின்னர் மேலும் 9,000 டாலர் பணத்தைச் செலவிட்டு அந்தப் பேருந்தை குடியிருக்கும் வீடாக மாற்றிவிட்டார். பேருந்தை வீடாக மாற்றும் ஒவ்வொரு நடவடிக்கையையும் படங்களுடன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவும்செய்திருக்கிறார்.
பேட்ரிக் ஷ்மித் அவருடைய தந்தையின் உதவியுடன் முதலில் பேருந்தின் இருக்கைகளை அகற்றி, வீட்டுக்கான புழங்குமிடத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த வேலை அவர்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வேலை முடிந்த பின்னர் அவர்களுக்குக் கிடைத்த திருப்தி அடுத்த வேலைக்கு அவர்களை ஆயத்தமாக்கியிருக்கிறது. அடுத்ததாகப் பேருந்தின் கூரையை வீட்டுக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறார்கள் தந்தையும் மகனும். இந்த வேலை தான் அனைத்து வேலைகளையும்விட கடினமாக இருந்ததாக ஷ்மித் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் பின்னர் தளத்தை உருவாக்கிய அவர்கள் அதைத் தொடர்ந்து அறைகளைப் பிரித்திருக்கிறார்கள். எல்லா வேலைகளும் முடிந்த பின்னர் தங்களது பேருந்து வீட்டுக்கு பிக் ப்ளு எனப் பெயரிட்டுவிட்டார்கள்.
பிக் ப்ளு என்ற அவர்கள் வீடு தயாரான உடன் அதிலேயே சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். கலிஃபோர்னியாவிலிருந்து ஃபுளோரிடா வரை கடற்கரை ஓரமாக இயற்கையை ரசித்தபடி அவர்கள் மேற்கொண்ட சுகமான பயணம் வாழ்தலின் திருப்தியை அளித்திருக்கிறது. தங்கள் பயணத்தைத் தொடரும் திட்டத்திலும் இருக்கிறார்கள். அமெரிக்கா முழுவதும் சுற்றி, ஆங்காங்கே தங்கிக் கிடைக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டு வாழ்வை நடத்தும் எண்ணத்தில் இருக்கிறார் பேட்ரிக் ஸ்மித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT