Published : 10 Oct 2015 10:51 AM
Last Updated : 10 Oct 2015 10:51 AM
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறைக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு வங்கியும் அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவருகின்றன. இதன்படி வீட்டுக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பை வங்கிகள் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன. ஆனால், வட்டிக் குறைப்பு விகிதத்தில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையைக் கையாண்டுவருகின்றன. இதற்கு என்ன காரணம்?
ரெப்போ ரேட் குறைக்கப்பட்டவுடன் வணிக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இதே கருத்தை வலியுறுத்தினார். வீட்டுக் கட்டுமான அமைப்புகள், கட்டுமான நிறுவனங்களும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும், இதன்மூலம் வீடு விற்பனை அதிகரிக்கும் என்றும் வலியுறுத்தின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வங்கிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
ரெப்போ ரேட்டை எல்லா வணிக வங்கிகளுக்கும் ஒரே விதமாகவே ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ஆனால், வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் குறைக்கும் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது. ஒவ்வொரு வணிக வங்கியும் ஒவ்வொரு விதமாக வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவருகின்றன. சில வங்கிகள் 0.50 சதவீதமும், இன்னும் சில வங்கிகள் 0.25 சதவீதமும், மேலும் சில வங்கிகள் 0.35 சதவீதம் என அறிவிப்பு வெளியிடுகின்றன. ஒவ்வொரு விதமாகச் செய்யப்படும் வட்டிக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வட்டிக் குறைப்பில் சமச்சீரற்ற தன்மை நிலவ என்ன காரணம்?

“வணிக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஒரு காலத்தில் ரிசர்வ் வங்கியே நிர்ணயித்துவந்தது. 1992-ம் ஆண்டில் வட்டி நிர்ணயிக்கும் அதிகாரத்தை அந்தந்த வங்கிகளுக்கே ரிசர்வ் வங்கி அளித்தது. உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்த அதிகாரம் மாறியது. ஒரு வங்கியால் எவ்வளவு கடன் கொடுக்க முடியும், அதற்குக் கட்டுப்படியாகும் அளவுக்கு வட்டி நிர்ணயிப்பதை அவர்களே முடிவு செய்வது பொருத்தமானது என ரிசர்வ் வங்கி கருதி, இந்த வாய்ப்பைப் பெருந்தன்மையாக வங்கிகளுக்கு அளித்தது.
இதன்படி அப்போது முதலே வட்டி விகிதங்களை வங்கிகளே நிர்ணயித்துவருகின்றன. அது அவர்களுக்குள் உள்ள அதிகாரம் என்பதால் ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்களை நிர்ணயித்துக்கொள்கின்றன. எனவேதான் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது” என்று விளக்கம் கூறுகிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
வட்டிக் குறைப்பு சமச்சீரற்ற முறையில் இருப்பது மட்டுமல்ல, சில வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வட்டிக் குறைப்பு பொருந்தும் என்றும் அறிவிக்கின்றன. இன்னும் சில வங்கிகள் புதிய, பழைய என இரு தரப்புக்கும் வட்டிக் குறைப்பு பொருந்தும் என்றும் அறிவிக்கின்றன. இதுவும் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
வட்டிக் குறைப்பு தங்களுக்கு உண்டா இல்லையா என்று அறிய முடியாமலும் தவிக்கிறார்கள். பழைய வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு பொருந்தாது என்று அறிவிப்பதன் மூலம் வட்டிக் குறைப்பு அறிவிப்பே வெற்று அறிவிப்போ என்றும் நினைக்கத் தோன்றுவதாக வாடிக்கையாளர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதுபற்றி எஸ்.கோபாலகிருஷ்ணன் என்ன கூறுகிறார்? “பழைய வாடிக்கையாளர்களுக்கு வட்டிக் குறைப்பின் பயன் கிடைக்காமல் போனால் அது நியாயமற்ற செயல். ஒரு குறிப்பிட்ட நாளில் வட்டி விகிதம் என்பது பழைய, புதிய என இரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் மாறுபடும் வட்டியின் (ஃப்ளோட்டிங் ரேட்) தாத்பரியம். இப்போது எல்லா வங்கிகளும் வீட்டுக் கடனை, மாறுபடும் வட்டியின் கீழ்தான் வழங்கிவருகின்றன. மாறுபடும் வட்டி விகிதம் என்பது, வட்டி குறையும்போது குறையும், ஏறும்போது ஏறும். எனவே எல்லோருக்கும் ஒரே விதமாக வட்டிக் குறைப்பு இருக்க வேண்டும். அப்படி பின்பற்றாத பட்சத்தில் மாறுபடும் வட்டி விகிதத்தின் தன்மையே அடிபட்டுப் போய்விடும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
சமச்சீரற்ற முறையில் வட்டிக் குறைப்பும், வட்டிக் குறைப்பில் பழைய, புதிய என பாகுபாடு காட்டப்படுவதன் மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறும் போக்கும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்வது என்பது நடைமுறை சாத்தியம்தான். ஆனால், எப்போதுமே தங்கள் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறாமல் வங்கிகள் பார்த்துக்கொள்வது வாடிக்கை. ஆனால் சமச்சீரற்ற வட்டி விகிதம், வட்டிக் குறைப்பில் பாகுபாடு இருக்குமேயானால் வாடிக்கையாளர்கள் வேறு வங்கிகளுக்கு மாறுவது அதிகரிக்கக்கூடும் என்றே வங்கியாளர்கள் கூறுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT