Last Updated : 12 Sep, 2015 10:05 AM

 

Published : 12 Sep 2015 10:05 AM
Last Updated : 12 Sep 2015 10:05 AM

வர்த்தக ரியல் எஸ்டேட்: கடை போடலாம் வாங்க!

பெருநகரங்களைக் குறிவைத்து நாளுக்கு நாள் புதுப்புது வணிக முயற்சிகள், வர்த்தக நிறுவனங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சென்னை தவிர்த்து கோவை, திருச்சி, மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் வணிக நிறுவனங்கள் தோன்றினாலும், காலப் போக்கில் அவை சென்னையை நோக்கி நகரவே முற்படுகின்றன.

என்னதான் வியாபாரம் என்றாலும், அதற்கு முதலில் அத்தியாவசியத் தேவை கடை போடுவது! அதாவது நிலையான ஓர் அலுவலகம். வணிகம் வளர வளர, அதற்கேற்றபடி, அலுவலகங்களும் பெரிய அளவில் தேவைப்படுகின்றன. ஆனால், சென்னையில் கடந்த சில காலமாக, நகரின் மையப் பகுதியில் அலுவலகம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த நிலை மாறி, நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலுவலகம் அமைக்க இடம் இருந்தால் நல்லது என்று கேட்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், நகரத்தின் வெளியே இடம் கிடைத்தால் அலுவலகத்தைப் பரந்த அளவில் வசதியாகக் கட்டமைக்க முடியும் என்பதுதான். நகரின் மையப்பகுதிகளில் நெருக்கடி நிறைந்த இடங்களில் அலுவலகம் அமைந்தால் இடவசதியும் குறைவாக இருக்கும். அதே சமயத்தில் வாடகையும் அதிகமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டே தற்போது சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது பெரும்பாலான ஐ.டி., ஐ.டி.சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், நாவலூர், மணப்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகளில் தங்களின் அலுவலகங்களை அமைத்து வருகின்றன.

இந்தப் பகுதிகள் அண்ணா சாலை, ஓ.எம்.ஆர். சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஜவாஹர்லால் நேரு சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற போக்குவரத்து வசதிகளையும் எளிதில் அடைய முடிகிறது.

இந்த வசதிகளின் காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைத்து வருகின்றன. நிலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தப் பகுதிகளில் முதலீடு செய்ய இது சரியான தருணம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x