Published : 26 Sep 2015 12:08 PM
Last Updated : 26 Sep 2015 12:08 PM
வீட்டின் படிக்கும் அறையாக இருந் தாலும் சரி, அலு வலக அறையாக இருந்தாலும் சரி, அதில் எப்படிப்பட்ட மேசையை அமைக்கிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. இந்த மேசை களை எந்த அளவுக்கு மெனக்கெடலுடன் வடிவமைக்கிறோமோ, அந்த அளவுக்குப் படைப்பாற்றலுடன் நம்மால் வீட்டில் செயல்பட முடியும். இந்த மேசைகளை உங்கள் ரசனைக்கு ஏற்றவகையிலும், அறையின் தன்மைக்குப் பொருந்தும்படியும் தேர்ந்தெடுக்க முடியும்.
இரட்டைச் சரிவு மேசை
இரட்டைச் சரிவு மேசை(Double-dip desk) நீளமாக இருவர் பயன் படுத்தும்படி இருக்கும். இதில் சில புத்தகங்களையும் வைத்துக்கொள்ளலாம். வீட்டில் ஒரே நேரத்தில், இருவரும் வேலை செய்ய வேண்டியிருந்தால், இந்த மேசையைத் தேர்ந்தெடுக்கலாம்.
மர மேசை
ஒரே ஒரு தடிமனான மரப் பலகையை வைத்தும் மேசையை உருவாக்கலாம். இதில் நான்கு புறமும் கால்களைப் பொருத்தி விட்டு இதை மேசையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். லேப்டாப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த மேசை ஏற்றதாக இருக்கும். மரப் பலகை நீளமான தாக இருந்தால், இந்த மேசையையும் இருவர் பயன்படுத்தலாம். இதில் சின்னச் சின்னதாக இழுப்பறை களையும் பொருத்தலாம்.
இந்த மரமேசையில் உலோக சேமிப்பு இழுப்பறைகளைப் பொருத்தினால், அதைக் குழந்தைகள் அறைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இழுப்பறைகள் திறந்தபடி இருந்தால் குழந்தைகளால் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
மிதக்கும் மேசை
அறையின் ஏதாவது ஒரு மூலையில் மிதக்கும் மேசையை அமைக்கலாம். இந்த மிதக்கும் மேசை அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் மேசை அமைக்கும் இடத்துக்குப் பின்னால் ஜன்னல் இருந்தால் இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
புத்தக மேசை
கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போதே இடையில் புத்தகம் படிக்க விரும்பு பவர்களுக்கு இந்தப் புத்தக மேசை பொருத்தமானதாக இருக்கும். இதில் ஒருபுறம் கணினி வைத்துக்கொள்ளலாம். மறுபுறம் புத்தகங்கள் அடுக்கிவைத்துக்கொள்ளலாம்.
சுவர் மேசை
அறையில் இடப்பற்றாக்குறை இருந்தால் சுவர் மேசைகளை அமைக்கலாம். சரியான இடைவெளி விட்டு இந்த சுவர் அலமாரிகளை அமைக்கும்போது இதை எளிதாகப் பயன்படுத்தலாம். நின்றுகொண்டு வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த சுவர் மேசைகள் ஏற்றதாக இருக்கும்.
வேடிக்கை மேசை
வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வேலை பார்க்க விரும்புபவர்கள் ஜன்னலில் பொருந்தும்படி மிதக்கும் மேசையை அமைக்கலாம். சூரிய வெளிச்சம் நேரடியாகப் படாத இடத்தில் இந்த மேசையை அமைப்பது நல்லது.
வண்ண மேசை
பழைய மர மேசையை வண்ணமடித்து அதையும் உங்கள் வீட்டின் அலுவலக மேசையாகப் பயன்படுத்த முடியும்.இந்த மேசையை அறையின் நடுவில் வைத்து விட்டுப் பயன்படுத்தினால், சுவரை மற்ற பயன் பாடுகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT