Published : 15 Feb 2020 12:13 PM
Last Updated : 15 Feb 2020 12:13 PM
சீதாராமன்
வீட்டுக் கட்டுமானப் பணிகளில் முக்கியமானது செண்ட்ரிங் போடுவது. அதாவது மேற்கூரைக்குக் கான்கிரீட் இடும் பணி இது. மேற்கூரை மட்டுமல்லாது அடித்தளத்துக்கும் கான்கிரீட் அவசியமானது. கான்கிரீட்டைச் சரியாக அமைக்கவில்லை என்றால் பிறகு பாதிப்புகள் உண்டாகும். வீட்டின் ஆயுளும் குறையும்.
அதனால் கான்கிரீட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட கான்கிரீட் அமைக்கப்பட்ட பிறகு அதைப் பராமரிப்பதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில், கான்கிரீட் பலமாக அமைந்தால்தான் வீட்டின் ஆயுள் நீடிக்கும்.
கான்கிரீட் அமைக்க கம்பி கட்டியவுடன் அதை அரிப்பிலிருந்து பாதுகாப்பது முக்கியம். இப்போது கான்கிரீட்டைப் பலப்படுத்த பல விதமான கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுபோலக் கட்டுமானக் கம்பியில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கவும் பல உபகரணங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஜென்ட்ரிஃபிக்ஸ். நாள்பட்ட கான்கிரீட் கட்டுமானத்தைப் பழுதுபார்க்க இது மிகப் பொருத்தமான கட்டுமானப் பொருள்.
ஜென்ட்ரிஃபிக்ஸ் தூள் போன்ற வடிவில் கிடைக்கும். இதை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்தலாம். தண்ணீருடன் கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். நன்றாகக் கூழ் போன்ற நிலை வருமாறு கலந்துகொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாதவாறு காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமான நீர் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
வீட்டுக்கு வண்ணம் பூசுவதுபோல் இந்தக் கரைசலைப் பூச வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் மேல் பகுதியை மூடும்படியாக இந்த ஜென்ட்ரிஃபிக்ஸைப் பூச வேண்டும். இவ்வாறு இருமுறை அடிப்பது அவசியம். கட்டுக் கம்பிகளால் கட்டப்பட்டு கம்பிகள் அடுக்கப்பட்டிருக்கும்.
கம்பிகள் மற்றும் கட்டுக் கம்பிகள் மேலும் முழுமையாக இந்த ஜெண்ட்ரி பிக்ஸைப் பூச வேண்டும். இது ஒரு கம்பிகளின் மேல் ஒரு மேல் பூச்சாக அணிவிக்க வேண்டும். இதை ஒரு கடமையாகச் செய்யாமல் இது அரிப்பைத் தடுப்பதற்காகச் செய்யப்படுகிறது என்பதை மனத்தில் வைத்து பூச வேண்டும். இது இப்போது இந்தியாவில் பரவலாகக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment