Published : 01 Aug 2015 12:17 PM
Last Updated : 01 Aug 2015 12:17 PM
வீட்டு வசதித் துறை சரிவடைந்திருத்த இந்தக் காலகட்டத்தில் நுட்பமான பல முறைகளில் நிறுவனங்கள் வீட்டு விற்பனையைச் செய்துவருகின்றன. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு 99 ஏக்கர் டாட் காம் ஆன்லைன் ப்ளாஷ் விற்பனையை அறிவித்து வெற்றிகண்டது. இந்த வெற்றி சோர்வடைந்திருந்த ரியல் எஸ்டேட் துறைக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் டாடா ஹோம்ஸ் நிறுவனமும் இப்போது ஆன்லைனில் வீட்டுக் கண்காட்சியை நடத்தியுள்ளது. டாடா ஹோம்ஸ் கடந்து ஒரு வருடத்திற்குள் 1,500 வீடுகளை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளது. இந்தக் கண்காட்சி மூலம் வீடு வாங்க உள்ளவர்களுக்கு டாடா சிறப்புச் சலுகைகளை அளிக்க உள்ளது.
கடந்த ஜூலை 13 - 15 தேதியில் இந்த ஆன்லைன் வீட்டுக் கண்காட்சியில் நடத்தியது. இது இந்தியாவின் முதலாவது ஆன்லைன் வீட்டுக் கண்காட்சி. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு நுழைவுக்கான எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் இந்த ஆன்லைன் கண்காட்சியில் கலந்துகொள்ள முடியும். இதன் மூலம் 200 வீடுகளை டாடா விற்பனைக்குக் காட்சிப்படுத்தியுள்ளது. 30 லட்சத்தில் இருந்து வீடுகள் விற்பனைக்கு உள்ளது.
டாடா ஹோம்ஸ் 2013-ம் ஆண்டு ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியது. தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது. இப்போது டாடா ஹோம்ஸ் நிறுவனம் ஹவுசிங் டாட் காம், ஸ்னாப் டீல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது.
மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, சென்னை, புனே ஆகிய நகரங்களில் உள்ள 11 வீட்டுக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளை டாடா விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த ஆனலைன் வீட்டுக் கண்காட்சி வெற்றிபெற்றால் இது மற்ற வீட்டு வசதி நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தரகர்கள் மூலம் வீடு வாங்குவதும் குறைய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT