Published : 11 Jul 2015 11:49 AM
Last Updated : 11 Jul 2015 11:49 AM
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது இன்றைக்கும் பலரின் கனவுதான். நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கும் இது வாழ்வின் லட்சியம். இன்றைக்குள்ள பொருளாதாரச் சூழலில் சொந்த பணத்தில் வீடு வாங்குவது என்பது சாத்தியமாகக்கூடிய காரியமல்ல. வாங்கும் சம்பளம் அன்றாடப்பாட்டுக்கே போதவில்லை. ஆக, எல்லோரும் வீடு வாங்க வங்கிக் கடனைத்தான் பெரும்பாலும் நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இன்று வங்கிக் கடன் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. வட்டி விகிதமும் ஓரளவு கட்டுக்குள் உள்ளது. வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தால் எளிதாகக் கிடைக்கவும் செய்கிறது. ஆனால் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, வங்கிக் கடன் கட்டணங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மதிப்பீட்டுக் கட்டணம் (Valuation Charge)
வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பித்தவுடன் வங்கிகள் தரப்பதிலிருந்து எடுக்கப்படும் நடவடிக்கை நீங்கள் கேட்ட தொகையை சரிபார்ப்பது. வங்கிகள் நியமிக்கும் அதிகாரிகள் குழு சொத்தையும் கோரிய தொகையையும் மதிப்பீடு செய்வார்கள். இவர்கள் அனுமதி அளித்த பின்புதான் வங்கிக் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். வீடு கட்டுவதற்கான திட்டச் செலவை பொறியாளர்கள் சரிபார்த்துச் சொல்வார்கள். இதை மதிப்பீட்டுக் கட்டணம் எனச் சொல்வார்கள். இந்தச் செலவு கடன் விண்ணப்பிப்போரிடம் இருந்துதான் வசூலிக்கப்படும். சில வங்கிகள் மதிப்பீடுக் கட்டணம் பெறுவதில்லை.
பத்திரக் கட்டணம் (Document Charge)
கடன் அளிப்பதற்கு வேண்டி சொத்துப் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டியிருக்கும். இந்தப் பத்திரங்களை ஆவணம் செய்வதற்கும் வங்கிகள் தனியாகக் கட்டணம் வசூலிக் கின்றன.
வங்கிக் கடன் மாற்றுக் கட்டணம் (Balance Transfer)
முதலில் கடன் விண்ணப்பித்த வங்கியில் வட்டித் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் குறைந்த வட்டி தரும் வங்கிக்கு கடனை மாற்ற முடியும். இதனால் முதலில் வீட்டுக் கடன் அளித்த வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும். இதைச் சரிசெய்யும் பொருட்டு இதற்கான கட்டணத்தை வங்கிகள் முன்பே வசூலித்துவிடும்.
ஸ்டாம்ப் பேப்பர் செலவுகள் (Stamp Duty)
ஸ்டாம்ப் பேப்பர் செலவுகளை கட்டிடத்தின் தன்மையை பொருத்தே இதை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதர கட்டணங்கள் (Other Charges)
இவை அல்லாமல் செயலாக்க கட்டணம்,(Processing Charge), நிர்வாக கட்டணம் (Admin Charge) என இன்னும் பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT