Published : 04 Apr 2015 12:57 PM
Last Updated : 04 Apr 2015 12:57 PM
சுவர்கள், தரைவிரிப்புகள், இருக்கைகள் மட்டுமல்லாமல் கண்ணாடிகளையும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்களில் தேர்ந்தெடுக்கலாம். இது வீட்டுக்கு ஒரு விதமான நவீன தோற்றத்தைக் கொடுக்கும்.
விளக்குகள்
வீட்டின் அலங்கார விளக்குகளைக்கூட ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள் இருக்கும்படி வாங்கலாம். மேசை விளக்குகள், கூரை விளக்குகள் போன்றவற்றிலும் நவீன ஜியோமெட்ரிக்கல் வடிவங்களின் கலவை இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம்.
வடிவங்களைக் கொண்டு அலங்கரிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நம்மிடம் இருக்கிறது. ஆனால், இப்போது நவீன வீடுகளில் ஜியோமெட்ரிக்கல் வடிவங்களைக் கொண்டு அலங்கரிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது. ஒரு வீட்டின் அமைப்பையும், ஸ்டைலையும் தீர்மானிக்கும் வலிமையைக் கொண்டவை வடிவங்கள்.
அறையில் இருக்கும் சில பொருட்களை, வடிவங்களை வைத்து அலங்கரிக்கும்போது வீட்டுக்கு ஒரு புதுவிதமான தோற்றத்தை அவை கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கோடுகள், சதுரங்கள், செவ்வகங்கள், முக்கோணங்கள், வட்டங்கள் வைத்து வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்ப்போம்.
தரைவிரிப்புகள்
வடிவங்களை வைத்து வீட்டை அலங்கரிக்கப் போகிறோம் என்று தீர்மானித்தவுடன், நீங்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது தரைவிரிப்புகளைத்தான். பார்த்தவுடன் கண்களைக் கவரும் பெரிய ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள் இருக்கும் தரைவிரிப்புகளை வாங்க லாம். தரைவிரிப்பில் இருக்கும் வடிவம் இரண்டு கான்ட்ராஸ்ட் நிறங்களில் இருந்தால் நல்லது.
அறுகோணச் சுவர்கள்
வரவேற்பறைச் சுவரில் உங்களுக்குப் பிடித்தமான ஜியோமெட்ரிக் வடிவங்கள் பிரதானமாக இடம்பெற்றிருக்கும் வால்பேப்பரை ஒட்டலாம். இது வீட்டுக்கு ஒருவித ‘ரெட்ரோ’ தோற்றத்தைக் கொடுக்கும். சதுரம், வட்டம் என்று பிரபலமான வடிவங்களை வைத்து மட்டும் யோசிக்காமல் பலவிதமான ஜியோமெட்ரிக் வடிவங்களை வைத்துச் சுவரை அலங்கரிக்கலாம்.
உதாரணத்துக்கு அறுகோண, ஐங்கோண வடிவங்களை வைத்து சுவரை அலங்கரிக்கலாம். ஒரு சிறிய அறையில் பெரிய வடிவங்கள் இடம்பெறும் வால்பேப்பரை ஒட்டும்போது, அறையை அது பெரிதாக்கிக்காட்டும். ‘ரெட்ரோ’ தோற்றத்தை விரும்பாதவர்கள் சுவரில் மென்நிறங்களான வடிவங்களைப் பயன்படுத்தலாம். மென்நிற வடிவங்கள் சுவர்களில் இருந்தால் அறைக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
கோடுகளும் இருக்கைகளும்
வீட்டின் அறைக்கலன்களிலும் ஜியோமெட்ரிக் வடிவங்கள் இருக்கும்படி வடிவமைக்க முடியும். பலவகையான கோடுகள், சரிவகங்கள், ‘ஷெவ்ரான்’ (Chevron), ‘டைமண்ட்’ போன்ற வித்தியாசமான வடிவங்களில் இருக்கைகளையும், மெத்தைகளையும், தலையணைகளையும் வடிவமைக்கலாம். இவற்றை அடர்த்தியான நிறங்களில் இருக்கும்படி தேர்ந்தெடுத்தால் கூடுதல் அழகாக இருக்கும்.
சமையலறை ரகசியம்
சமையலறையின் சுவர்களையும் இந்த வடிவங்களை வைத்து வடிவமைக்கலாம். பல நிறங்களாலான வட்டங்களையோ, சதுரங்களையோ வைத்து சமையலறைச் சுவர்களை அலங்கரிக்கலாம்.
புத்தக அலமாரிகள்
புத்தக அலமாரிகளையும் ஜியோமெட்ரிக்கல் வடிவம் வெளிப்படும் விதமாகவே வாங்கலாம். வீட்டின் கருப்பொருளாக வடிவங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதை இவையெல்லாம் பறைசாற்றும்.
கண்ணாடிகள்
சுவர்கள், தரைவிரிப்புகள், இருக்கைகள் மட்டுமல்லாமல் கண்ணாடிகளையும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்களில் தேர்ந்தெடுக்கலாம். இது வீட்டுக்கு ஒரு விதமான நவீன தோற்றத்தைக் கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT