Last Updated : 07 Feb, 2015 12:32 PM

1  

Published : 07 Feb 2015 12:32 PM
Last Updated : 07 Feb 2015 12:32 PM

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உதவும் போர்டல்

அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான தேவையைக் கவனித்துக்கொள்ள இப்போதெல்லாம் அநேக அமைப்புகள் வந்துவிட்டன. இவை அடுக்குமாடியில் குடியிருப்பவர்களின் தேவையைத் தெரிந்து அவற்றைத் தீர்க்க உதவுகின்றன. இப்படி அடுக்குமாடியில் குடியிருப்பவர்களையும் அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளையும் இணைய சேவை ஒன்று இணைக்கிறது. அப்பார்ட்மெண்ட் அட்டா (ApartmentADDA) எனப்படும் ஒரு ஆன்லைன் போர்டல் அடுக்குமாடி குடியிருப்புகளையும், வில்லாக்களையும் நிர்வகிப்பதை எளிமையாக்குவதற்காக இயங்கிவருகிறது.

அந்த போர்டலில் பதிவு செய்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களையும், அடுக்குமாடி குடியிருப்பை நிர்வகிக்கும் சங்கத்தினரையும் அது இணைக்கிறது. இந்த போர்டலில் அவர்களுக்கான பிரத்யேகமான அட்டா அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது. இந்த அட்டா போர்டல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தொடர்பு, நிர்வாகம், பராமரிப்பு பில்லிங், கணக்கியல், பணம் செலுத்தும் வசதி என எல்லாவற்றையும் வழங்குகிறது.

எளிமையாகும் தகவல்தொடர்பு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், நிர்வாகச் சங்கத்தினர்கள் என இருவருக்கும் பல வசதிகளை வழங்கும்படி இந்த போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டலில் அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான ஃபோரம் இருக்கிறது. அதில் அவர்கள் விவாதிப்பதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்குமான வசதி இருக்கிறது.

ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்படும் இந்த அட்டா பக்கத்தில் ஆன்லைன் தகவல் பலகை இருக்கிறது. அதில் குடியிருப்பில் நடக்கும் கொண்டாட்டங்கள், சந்திப்புகள், காலியாக இருக்கும் பார்க்கிங் இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன், அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் குழந்தைகளுக்கான வகுப்புகள், பெரியவர்களுக்கான வகுப்புகள் என எல்லா வகுப்புகளின் நாட்களையும், நேரத்தையும் தெரிந்துகொள்வதற்கான காலண்டர் வசதியும் இந்த அட்டா போர்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தீர்வுகள்

அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு காவலர்களுக்கு உதவும் வகையில் ‘கேட்கீப்பர் ஆப்ஸ்’ வசதியையும் வழங்குகிறது அட்டா. பார்வையாளர்கள் வருகையைப் பற்றிய தகவல்களையும் எஸ்எம்எஸ் மூலம் குடியிருப்பவர்களுக்கு இந்த அட்டா போர்டல் உடனடியாகத் தெரிவிக்கிறது. இந்த கேட்கீப்பர் ஆப்ஸ் இன்டர்நெட் வசதி இல்லாமலே இயங்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.

அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.

நிர்வகிக்கும் பயிற்சி

அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறமை யாக நிர்வகிப்பதற்கான பலவிதமான பயிற்சிகளை நிர்வாகிகளுக்கு வழங்குகிறது. நீச்சல் குளங்களைப் பராமரிப்பதில் ஆரம்பித்துப் பல்வேறு விதமான பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்குக் குடியிருப்புகளில் அட்டா ஏற்பாடு செய்துதருகிறது.

இந்த அட்டா போர்டல் வசதி இப்போது சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் இயங்குகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் அட்டா போர்டலால் பயனடைந்துவருகின்றனர்.

மேலும் அட்டா போர்டல் பற்றித் தெரிந்துகொள்ள: >apartmentadda.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x