Published : 31 Jan 2015 11:52 AM
Last Updated : 31 Jan 2015 11:52 AM
வீடுகளின் விலை சாமானியர்களின் கைக்கெட்டாதபடி மிக அதிகமாகவே உள்ள நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி கைகூடுவதற்குச் சாத்தியமான நிலை தென்படுகிறது. ஆனால் வீடுகளின் விலை குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
இதனால் வீடு வாங்க விருப்பம் கொண்டுள்ளோர்கூடத் தங்கள் எண்ணத்தை ஒத்திப்போடவே விரும்வார்கள் என்றும் அந்த அறிக்கை யதார்த்த நிலையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இதனிடையே கடந்த ஆண்டில் இந்தியாவின் ஏழு மாநகரங்களில் வீடுகளின் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், வீடுகளின் விலை அதிகம் என்பதும் வீட்டுக் கடனின் வட்டிவிகிதம் அதிகம் என்பதுமே இதற்குக் காரணங்கள் என்றும் சிபிஆர்இ ஆலோசனை நிறுவனம் தெரிவித்திருந்தது.
பல நகரங்களில் வீடுகளின் விலை அணுகக்கூடிய நிலையில் இல்லை என்பதாலேயே வீடுகளின் விற்பனையில் மந்த நிலை நிலவுவதாகவும் சிபிஆர்இ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இப்படியான சூழலில் வீட்டு வசதிகளைச் செய்து தரும் கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கி, விற்பனைக்கென வைத்துள்ள வீடுகளின் விலையைக் குறைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தியா ரேட்டிங்க்ஸ் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அலுவலகங்களுக்கான, வணிக நிலையங்களுக்கான விற்பனை சூடுபிடிக்கலாம் என்றும் அது ஆருடம் சொல்கிறது.
ஏனெனில் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதைக் கவனத்தில் கொண்டால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் வர்த்தக செயல்பாடுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்றும் எனவே அவை தங்கள் செயல்பாடுகளுக்கான அலுவலகங்களின் பரப்பை விஸ்தரிக்கும் என்றும் அந்நிறுவனம் சொல்கிறது.
விற்கப்படாத வீடுகள்
மேலும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, நல்ல வேலை, நல்ல சம்பளம் போன்றவை கிடைத்தாலும் வீடுகளின் விலை ஓரளவுக்கு அணுகக்கூடிய நிலையில் உள்ள போது மட்டுமே நுகர்வோர்கள் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அதனால் வீட்டுத் தேவைகள் பெருகும் என்றும் இந்தியா ரேட்டிங்க்ஸ் கூறுகிறது.
சந்தையின் தேவையைச் சமாளிக்கப் போதுமான வீடுகள் கைவசம் உள்ள போதும், தங்களுக்குக் கிடைத்துவரும் சாதகமான நிதியுதவிகளால் கட்டுமான நிறுவனங்கள் அதிகமான குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மும்பையில் 50 மாதங்கள் விற்பனைக்குத் தேவையான வீடுகளும், ஹைதராபாத்தில் 27 மாதங்கள், பெங்களூரில் 22 மாதங்கள், சென்னையில் 20 மாதங்கள் வரைக்கும் விற்பதற்குத் தேவையான வீடுகள் கையிருப்பில் இருந்ததாகத் தெரிகிறது.
வீடுகள் வாங்க விருப்பம் கொண்ட நுகர்வோர்கள் வீடுகளின் விலை உயர்வின் காரணமாக வீடுகளை வாங்காமல் தள்ளிப்போடுவதால் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தியா ரேட்டிங்க்ஸின் தகவல் படி, வீடுகளின் விற்பனைக் கடந்த ஆண்டில் தொடர்ந்து சரிவடைந்துள்ளது. ஆனாலும் கட்டுமான நிறுவனங்கள் தங்களது குடியிருப்புகளின் விலையைக் குறைக்கப் போவதில்லை ஏனெனில் அவற்றுக்குக் ஆதரவான நிதியுதவிகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன என்று அது கூறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அந்நிய முதலீட்டுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதாலும் கட்டுமான நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் கிடைத்துவருகின்றன என்று கூறப்படுகிறது. இந்த நிதி வரத்துகளுக்கு ஏதாவது கட்டுப்பாடு விதிக்கும் பட்சத்தில் நிதி திரட்டுவதற்காகவாவது தங்களிடம் உள்ள கையிருப்பு வீடுகளின் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் கையிருப்பில் விற்கப்படாத வீடுகள் அதிகமாக உள்ளபோதும் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை நல்ல நிலையில் இயங்குகிறது என்ற தோற்றத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு தொடர்ந்து வீடுகளைக் கட்டிவருவது சரியல்ல என்றும் இந்தியா ரேட்டிங்க்ஸ் எச்சரிக்கிறது.
அதே சமயம் வீடுகளின் விற்பனை மந்தமாகும் பட்சத்தில் ஓரிரு இடங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அது தெரிவிக்கிறது. எப்படியோ கட்டுமான நிறுவனங்கள் வீடுகளின் விலையைக் குறைத்தால் ஒழிய சாமானியர்களின் கனவு இல்லம் கைகூடப்போவதில்லை என்பதே யதார்த்தம்.
இந்தியப் பொருளாதாரம் 2015-16 ஆண்டுகளில் வளர்ச்சிகாணும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்த நிதியாண்டில் சாமானியனின் வீடு என்னும் கனவு சாத்தியப்படுவது கடினம் என்றும் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இது தான் யதார்த்தம் என்பதைத் தரவுகளுடன் எடுத்துச்சொல்கிறது இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தின் அறிக்கை.
குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள் வீட்டு விலையைத் தொடர்ந்து அதிகமாகவே வைத்திருந்தபோதும் அவை தங்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடன் போன்ற நிதியுதவிகளின் மூலம் வீடுகளை அதிகரித்துக்கொண்டே போகின்றன என்றும் அந்த அறிக்கை நிலையை மேலும் வெளிச்சமாக்குகிறது.
பொருளாதார வளர்ச்சி
வீடுகளின் விலை சாமானியர்களின் கைக்கெட்டாதபடி மிக அதிகமாகவே உள்ள நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி கைகூடுவதற்குச் சாத்தியமான நிலை தென்படுகிறது. ஆனால் வீடுகளின் விலை குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இதனால் வீடு வாங்க விருப்பம் கொண்டுள்ளோர்கூடத் தங்கள் எண்ணத்தை ஒத்திப்போடவே விரும்வார்கள் என்றும் அந்த அறிக்கை யதார்த்த நிலையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
இதனிடையே கடந்த ஆண்டில் இந்தியாவின் ஏழு மாநகரங்களில் வீடுகளின் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், வீடுகளின் விலை அதிகம் என்பதும் வீட்டுக் கடனின் வட்டிவிகிதம் அதிகம் என்பதுமே இதற்குக் காரணங்கள் என்றும் சிபிஆர்இ ஆலோசனை நிறுவனம் தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT