Published : 12 Aug 2017 11:17 AM
Last Updated : 12 Aug 2017 11:17 AM

வீட்டைப் பராமரிக்க...

சொ

ந்த வீடோ, வாடகை வீடோ வீட்டைப் பராமரிப்பது முக்கியம். வீட்டை அழகாக வைத்திருந்தால் நம்முடைய அன்றாடச் செயல்களும் உற்சாகமாக இருக்கும். வீட்டைப் பராமரிப்பதும் எளிய வேலைதான். அதற்குச் சில யோசனைகள்:

வீட்டுக்குள் தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களை நீக்கினாலே, நிறைய இட வசதி கிடைக்கும். செலவு செய்யாமல் வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் இதைச் செய்தாலே போதும். வீட்டில் இருக்கும் விளக்குகளை நவீன நிலை பொருத்திகளால் மாற்றலாம். இது வீட்டின் வெளிச்சம் மற்றும் அழகை உயர்த்தும். சுவரில் விரிசல் அல்லது பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படியிருந்தால் சிமெண்ட் வைத்துப் பூசுவது நல்லது.

சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டும். சுவர்களில் எண்ணெய் பிசின்கள் அரக்கு போல ஒட்டியிருக்கும். இதனால் சுவர்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அவற்றை முறையாக நீக்கிச் சமையலறை சுவர்கள் பாழாகாமல் பராமரிக்க வேண்டும். தனி வீடாக இருந்து, தோட்டம் அமைக்க இடமும் இருந்தால், அதன் அழகை மென்மேலும் அதிகரிக்கலாம். வீட்டைச் சுற்றி உள்ள இடங்களை மண்வெட்டியால் கொத்தி, அழகிய பூந்தோட்டங்களை உருவாக்கவும்.

சுவர்களுக்கு வண்ணம் பூசுவது போலக் கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசுவது அவற்றின் ஆயுளை மட்டுமல்ல அழகையும் அதிகரிக்கும். அனைத்து அறைகளுக்கும் பிடித்த நிறத்தில் வர்ணம் பூச முயற்சி செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வர்ணம் பூசினால் நல்லது.

தரை மற்றும் ஃபர்னிச்சர்களை அடிக்கடி நன்றாகத் துடைப்பது முக்கியம். ஜன்னல்களுக்குத் திரைச்சீலைகள் அமைப்பது பார்ப்பதற்கு அழகைத் தரும். திரைச்சீலைகளை அவ்வப்போது துவைப்பதும் முக்கியம். குளியலறையில் பதிக்கப்பட்டுள்ள டைல்களில் சோப்பு நுரையால் அழுக்குப் படியும். இதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x