Last Updated : 15 Nov, 2014 11:52 AM

 

Published : 15 Nov 2014 11:52 AM
Last Updated : 15 Nov 2014 11:52 AM

வீட்டுக் கடனுக்குக் காப்பீடு அவசியமா?

இன்றைக்குள்ள பொருளாதாரச் சூழலில் வீட்டுக் கடன் உதவியின்றி சொந்த வீடு என்பது பெரும்பாலானவர்களுக்குச் சாத்தியமில்லை. சில குடும்பங்களில் வருமானம் ஈட்டும் நபர் ஒருவராகத்தான் இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐயை அவரே செலுத்த வேண்டியதிருக்கும். அவருக்கு ஏதெனும் அசம்பாவிதம் நேரும்பட்சத்தில் இஎம்ஐயைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை அந்தக் குடும்பம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வீட்டுக் கடன் வழங்கிய நிறுவனம் கடன் வாங்கியவர் இல்லாத பட்சத்தில் அவருடைய வாரிசுதாரரைக் கடனைத் திருப்பிச் செலுத்தச் சொல்லிக் கேட்கும். அவர் திருப்பிச் செலுத்தும் பொருளாதார நிலையில் இல்லாத பட்சத்தில் கடனில் இருக்கும் வீட்டைக் கடன் அளித்த நிறுவனம் கைப்பற்றும். இந்த இடத்தில்தான் கடனுக்குக் காப்பீடு என்பது அவசியமாகும். உங்கள் கடனுக்குக் காப்பீடு செய்யும் பட்சத்தில் அவர்கள் உங்கள் வீட்டுக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.

நீங்கள் இல்லாத பட்சத்திலும் உங்கள் வீட்டுக் கடனைச் செலுத்துகிறார்கள். அதாவது கடன் வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக் கடன் தொகையை அடைக்க இந்தக் காப்பீடு வழிவகை செய்கிறது. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்க அறிவுறுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x