Last Updated : 20 Jun, 2015 12:24 PM

Published : 20 Jun 2015 12:24 PM
Last Updated : 20 Jun 2015 12:24 PM

சொத்தைக் கண்காணிக்கும் வழி

ஆசை ஆசையாக வீட் டையோ, மனையையோ வாங்குகிறோம். வாங்கிய சொத்தைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்கிறோம். பின்னர் கிரயப்பத்திரத்தை வீட்டில் வைத்துக் கொள்வோம்.

எல்லாம் சரி, குறிப்பிட்ட அந்தச் சொத்து நம் பெயருக்கு மாறியதா இல்லையா என்பதை மீண்டும் பரிசோதித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதற்காக மீண்டும் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு சென்று காத்திருக்கத் தேவையில்லை. ஆன்லைனிலேயே பார்த்துவிடலாம்.

இதற்குக் கைகொடுக்கிறது ஈ.சி. எனப்படும் வில்லங்கச் சான்றிதழ். பலரும் ஒரு சொத்தை விற்கும் போதோ அல்லது வாங்கும்போதோ மட்டுமே வில்லங்கச் சான்றிதழைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்கிப் பார்ப்பார்கள்.

ஆனால், குறிப்பிட்ட சொத்து தன் பெயருக்கு மாறியிருக்கிறதா என்பதையும் ஈ.சி.யைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். தற்போது பத்திரப்பதிவு செய்யப்படும் எல்லா சொத்துகளும் உடனடியாக ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டு விடுகின்றன என்பதால் பதிவைச் சுலபமாகப் பார்க்கலாம் என்கிறார்கள் பத்திரப்பதிவு துறையினர்.

வில்லங்கச் சான்றிதழை tnreginet.net என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். அங்கு சில கேள்விகள் கேட்கப்படும். எந்த மண்டலம், எந்த மாவட்டம், எந்தப் பத்திரப் பதிவு அலுவலகம், எந்த இடம் (கிராமம்) என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

வாங்கிய சொத்து எந்த மண்டலம், எந்த மாவட்டம், எந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குட்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். பின்னர் எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும்.

புதிதாக வாங்கிய சொத்து என்றால் கியரப்பத்திரம் செய்த நாளில் இருந்து இப்போதைய நாள் வரைக்கும் பார்க்கலாம். அதே சொத்து முன்பு யார்யார் பெயரில் இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்க்க விரும்பினால் தேதியை அதற்கேற்ப கொடுக்க வேண்டும். புல எண் எனப்படும் சர்வே எண்ணும் கேட்கப்பட்டிருக்கும்.

சரியான எண்ணை அங்கு கொடுக்க வேண்டும். கேட்கப்படும் எல்ல விவரங்களையும் சரியாக நிரப்பினால் சொத்து தன் பெயருக்கு மாறியிருக்கிறதா என்பதை ஆன்லைனில் பார்க்க முடியும். தமிழிலும் ஈ.சி. விவரங்களைப் பார்க்க முடியும். அதற்கு இணையதளத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துருவைப் (ஃபாண்ட்) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் போலி ஆவணங்கள் சர்வ சாதரணமாக உலா வருகின்றன. போலியான சொத்து ஆவணங்களைத் தயாரித்து நமக்கே தெரியாமல் நம் சொத்தை விற்றுவிடும் மோசடிப் பேர்வழிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

எனவே நாம் வாங்கிய சொத்து அப்படியே இருக்கிறதா என்பதை நேரில் சென்று பார்ப்பதாலோ அல்லது வீட்டில் குடியிருப்பதாலோ மட்டும் சொந்தமாகிவிடாது. ஆவணங்களின் அடிப்படையில் நம் பெயரிலேயே குறிப்பிட்ட சொத்து இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கான சொத்தாகும்.

அதற்கு அவ்வப்போது வாங்கிய சொத்து விவரங்களை ஈ.சி.யைப் பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதற்கு ஆன்லைன் மிகவும் எளிமையான வழி மட்டுமல்ல நம்பிக்கையானதும்கூட.

எனவே வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தை மட்டும் பத்திரமாக வீட்டில் வைத்து கொண்டால் மட்டும் போதாது. சொத்து நம் பெயரிலேயே இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும்கூட உங்கள் கடமை அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x