Published : 20 Jun 2015 11:56 AM
Last Updated : 20 Jun 2015 11:56 AM
வாடகை வீடுகள், சிறுகடைகள் தொடங்கி பெரிய அளவில் நிலங்கள் வரை வாங்குவதற்கும் விற்பதற்கும் தரகர்கள் நமது வேலையை எளிதாக்குபவர்களாக உள்ளனர்.
ஆனால் இந்தியா முழுவதும் தரகர்கள் போதிய கௌரவத்தைப் பெறாத, அங்கீகரிக்கப்படாத, ஒருங்கிணைக்கப்படாதவர்களாகவே உள்ளனர். தரகர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும், போதிய தகவல்களைப் பெறவும், பயிற்சி பெறுவதற்குமான சமூக வலைத்தளம் ஒன்றை டாடா ஹவுசிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உலகத் தரகர்கள் தினமான ஜூன் 9-ம் தேதி வீட்டுத் தரகர்களுக்கான இந்த முதல் சமூக வலைத்தளம் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தின் பெயர் ‘பந்தன்’. ராயல் இன்ஸ்டிட்யூசன் ஆப் சார்டர்ட் சர்வேயர்ஸ்(ஆர்ஐசிஎஸ்) அமைப்புடன் சேர்ந்து பந்தன், தரகர்களுக்கான தரச் சான்றிதழையும் வழங்குகிறது.
இந்தியா முழுவதும் வளர்ந்துகொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஒரு வாடிக்கையாளருக்குத் தரமான சேவையை வழங்குவதில் தரகர்கள் மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்த இருக்கின்றனர். அவ்வகையில் அவர்களுக்கான முதல் அங்கீகாரம்தான் பந்தன்.
உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப இதுவரை செயல்பட்டு வந்த தரகர்கள், வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் சர்வதேச தர அளவீடுகளுடன் போட்டியிடுவதற்கும், வர்த்தகத்தின் மற்ற பங்குதாரர்களைக் கையாள்வதற்கும் பந்தன் உதவிசெய்யும் என்று டாடா ஹவுசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரோடின் பானர்ஜி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT