Published : 18 May 2019 01:07 PM
Last Updated : 18 May 2019 01:07 PM
வீடு கட்ட, வாங்க எனப் பலரும் வீட்டுக் கடனையே நம்பியே இருக்கிறோம். சேமிப்பு என்னதான் இருந்தாலும் ஒரு பெரும் தொகைக்கு வீட்டுக் கடனே கை கொடுக்கும். வீட்டுக் கடன் பெரும்பாகும் 20, 30 வருஷத்துக்கான தவணையைக் கொண்டதாக இருக்கும். நாம் வாங்கும் கடனைப் பொறுத்து வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைத் தொகை இருக்கும்.
வீட்டுக் கடன் வாங்கிய பிறகு மாதத் தவணை செலுத்தி வருவோம். இப்போது நமக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கிறது. சேமிப்பின் வழியே வருமானமாகவோ கிடைக்கிறது என்றால் அதை நமக்கு வங்கியில் இருக்கும் வீட்டுக் கடனில் கட்டித் தவணையைக் குறைக்க நினைப்போம். அது சாத்தியம்தான். வங்கியில் நிலுவையில் இருக்கும் கடனுக்கான அசல் தொகைக் கடனில் உங்கள் பணத்தை வரவு வைக்க முடியும்.
இதன் மூலம் உங்கள் அசல் கடன் தொகை குறையும். இதனால் உங்கள் கடன் தவணைக் காலம் குறையும். அதைச் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். சிலர் இப்படி அசல் தொகையை அடைக்கும்போது தவணைத் தொகை குறையும் என நினைக்கிறார்கள்.
ஆனால், பெரும்பாலான வங்கிகள் நீங்கள் அசல் கடனுக்குச் செலுத்தும் தொகையில்தான் அதை வரவு வைக்கும். அதனால் கடனுக்கான உங்கள் தவணைத் தொகை குறைவதில்லை. மாறாக, உங்கள் தவணைக் காலம் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT