Published : 23 Mar 2019 10:09 AM
Last Updated : 23 Mar 2019 10:09 AM
மேஜைகளில் பல விதம் உண்டு. சாப்பாட்டு மேஜை, எழுத்து மேஜை போன்று பயன்பாட்டு அடிப்படையிலான மேஜைகளில் ஒன்றுதான் காபி மேஜை. இந்த காபி மேஜையிலும் வடிவமைப்பு முறையிலும் பல வகை உள்ளன. அந்த வகை மேஜைகளில் புதிய வடிவம்தான் ‘தண்ணீர் மேஜை’ (water table).
இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அறைக்கலன் வடிவமைப்பாளரான டெரெக் பியர்ஸ்தான் இந்தப் புதிய வகை காபி மேஜைகளை உருவாக்கியுள்ளார்.
கருப்பொருளின் அடிப்படையில் உள் அலங்கார வடிவமைப்பு செய்வது, வண்ணம் தீட்டுவது எல்லாம் இந்த நவீனக் காலத்து முறை. அதனடிப்படையில்தான் இந்தத் தண்ணீர் மேஜைகளை உருவாக்கியுள்ளார். காபி மேஜையின் மேற்பரப்பைத் தண்ணீர் மட்டமாகச் சித்தரித்து அவர் இந்த மேஜையை உருவாக்கியுள்ளார்.
அந்த மேற்பரப்பில் நீர்வாழ் மிருகங்களான நீர்யானை, நீர்நாய் போன்றவை தலையை நீட்டிப் பார்ப்பதுபோல் வடிவமைத்துள்ளார். இது வரவேற்பறைக்குப் புதிய தோற்றத்தைத் தரும். இதுமட்டுமல்லாது தவளை, வாத்து, டால்பின் போன்றவை இந்தத் தண்ணீர் மேஜை பரப்புக்குள் தலை நீட்டுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT