Published : 09 Jun 2018 11:04 AM
Last Updated : 09 Jun 2018 11:04 AM
வீ
ட்டைத் தங்கள் கைகளாலாலேயே அலங்கரிக்க நினைப்பவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். அப்படி அலங்கரிக்க நினைப்பவர்களுக்குப் பல யூடியூப் சேனல்கள் உதவுகின்றன. அந்த வகையில், ‘வென்ட்யூனோ ஆர்ட்’ என்ற யூடியூப் சேனல் வீட்டைக் கலை ரசனையுடன் எளிமையான வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து எப்படி அலங்கரிப்பது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, 14 வழிகளில் வீட்டை எளிமையாக எப்படி அலங்கரிப்பது என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி.
பழைய பாட்டிலைத் துணியால் ஓர் அழகான ‘பென், பென்சில் ஹோல்டராக மாற்றுவது, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வைத்துச் சுவரை அலங்கரிப்பது, காகித மலர்களில் செய்யப்படும் சுவர் அலங்காரம், ஐஸ் குச்சிகள், மரத் துணி கிளிப்களில் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை இந்தக் காணொலி விளக்குகிறது.
அத்துடன், கலர் க்ரையான்கள், மொட்டை ஓட்டைவைத்து அலங்கார மெழுகுவர்த்திகள் செய்வது, பிளாஸ்ட்டிக் ஸ்பூன், கண்ணாடி க்ளாஸை வைத்து அலங்கார விளக்குச் செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளையும் இந்தக் காணொலி விளக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT