Published : 16 Jun 2018 11:21 AM
Last Updated : 16 Jun 2018 11:21 AM
உ
லகின் மிகப் பெரிய ரயில்வே நிறுவனங்களுள் ஒன்று இந்திய ரயில்வே. உலகில் மிக அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் இந்திய ரயில்வேக்கு 8-வது இடம். 165 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவற்றில் நாளொன்றுக்கு இரண்டு கோடிக்கு மேலானவர்கள் பயணம் செய்கிறார்கள். 1951-ம் ஆண்டு இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே சென்னையில் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory-ICF) தொடங்கப்பட்டது.
தற்போது அறுபத்தி மூன்று ஆண்டுகளைக் கடந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை தொடக்க காலத்தில் எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என்பதைக் கட்டிடங்கள் வழியாகக் காண்பிக்கும் ‘ICF Journey Then & Now’ என்ற புத்தகம் வைர விழாவின்போது வெளியிடப்பட்டுள்ளது.
உதாரணமாக 1955-ம் ஆண்டில் இந்தத் தொழிற்சாலையின் முகப்புக் கட்டிடத்தின் ஒளிப்படமும் அடுத்தபடியாக இன்று 2018-ல் அந்தக் கட்டிடம் எப்படி மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் ஒளிப்படமும் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த ஒளிப்படங்களுள் சில...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT