Published : 19 Apr 2014 12:01 PM
Last Updated : 19 Apr 2014 12:01 PM
வீட்டை அழகாகக் காட்டுவதில் அலங்காரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. சிறிய வீட்டைக்கூட நேர்த்தியான அலங்காரம் மூலம் அழகாகக் காட்டலாம். அதற்கு கொஞ்சம் மெனக்கேட வேண்டும். அவ்வளவுதான்! வீட்டு அலங்காரத்தில் எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை என்பதைப் பார்ப்போம்.
* பெரிய அலங்காரப் பொருட்கள் வாங்குவதைவிட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது.
* எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும். வீட்டுக்குள் பூசப்படும் வண்ணம் நன்றாக இருந்தாலே வீட்டுக்கு ஓரளவு கலைநயம் வந்துவிடும்.
* எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும். வீட்டுக்குள் பூசப்படும் வண்ணம் நன்றாக இருந்தாலே வீட்டுக்கு ஓரளவு கலைநயம் வந்துவிடும்.
* சுவர்களில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்களை ஒட்ட வைத்து அழகு சேர்க்கலாம்.
* அழகான குஷன்களை வீட்டில் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்கு ஆடம்பர அந்தஸ்தைத் தரும்.
* அறையின் சுவர் வண்ணங் களுக்கு ஏற்ப குஷன்களைத் தேர்வு இருப்பது அழகிற்கு அழகு சேர்க்கும்.
* பொருட்கள் வைக்கப்படும் இடத்தைப் பொருத்தே அழகு வெளிப்படும். எனவே எந்த இடத்தில் எந்தப் பொருட்களை வைக்கலாம் என்பதை யோசித்து வைக்கவும்.
* வீட்டுச் சுவரில் குழந்தைகள் படம் மாட்டினால் வீடு அழகாக இருக்கும். பழைய புகைப்படங்கள், இயற்கை காட்சிப் படங்கள், பசுமைச் சூழல் புகைப்படங்கள் அறையை அழகாகக் காட்டும்.
* அலங்காரச் செடிகளை வீட்டுக்குள்ளும் வைத்து அலங்கரிக் கலாம். பூக்கள் மலரும் செடியாக இருந்தால் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* வீட்டை அழகாகக் காட்டு வதில் திரைச்சீலையும் முக்கியம். அறையின் நிறம், அங்குள்ள பொருட்களுக்கு ஏற்ப ஜன்னல், கதவுகளில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள் அமைய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT