Published : 16 Feb 2018 12:20 PM
Last Updated : 16 Feb 2018 12:20 PM
கட்டுமான துறை விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சிலற்றுக்கான விளக்கத்தை முதல் பகுதியில் பார்த்தோம். இதோ இன்னும் சில முக்கியமான வார்த்தைகள் மற்றும் அதன் விளக்கம்....
தொடக்க சான்றிதழ் (Commencement certificate)
ஒரு இடத்தில் கட்டிடம் எழுப்புவதற்கு முன் நகராட்சி / மாநகராட்சியில் அவசியம் பெற வேண்டிய சான்றிதழாகும். அடுக்குமாடி குடியிருப்பை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், கட்டுமான நிறுவனத்தால் இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.
பொதுவான பகுதிகள் (Common areas)
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு அல்லாது பொதுவாக அமைந்திருக்கும் இடம். அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலும் இந்த இடங்களில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்ற பொது உபயோகத்திற்கான வசதிகள் இருக்கும். குடியிருப்பவர்களிடமிருந்து பொதுவான பரமாரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு இது அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களால் நிர்வாகிக்கப்படும்.
உத்திரவாத சான்றிதழ் (Encumbrance certificate)
கட்டிடம் எழுப்பபடவிருக்கும் அந்த நிலம் எந்த வித வில்லங்கமும் இல்லாத இடம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழாகும்.
முத்திரை வரி (Stamp duty)
அரசு ஒவ்வொரு சொத்துக்கும் முத்திரை தாள் வழியில் வரி வசூலிக்கும். இது விளைநிலம், விளையாத நிலம், தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என அனைத்து வகை சொத்துகளுக்கும் பொருந்தும். இந்த வரியை சொத்தை வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT