Published : 16 Feb 2018 11:58 AM
Last Updated : 16 Feb 2018 11:58 AM
இன்று பெரும்பாலான நவீன இந்திய பெண்களுக்கு , தான் சம்பாதித்து சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் பெரும் கனவாக இருக்கிறது.
அதற்கு ஏதுவாக இந்திய அரசாங்கம், வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளன. அப்படி பெண்கள் சொத்து வாங்குவதற்க்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில திட்டங்களை இங்கே பார்ப்போம்.
பாரத் ஸ்டேட் வங்கியின் ஹெர் கர் (Her Ghar)
பாரத் ஸ்டேட் வங்கி பெண்களுக்கான வீட்டுக் கடன்களை 9.4% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. அதாவது ஒரு லட்சத்திற்க்கு ரூ. 834 மாத சந்தா என்ற அடிப்படையில் 30 வருட காலத்திற்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் செயலாக்க கட்டணத்தில் தள்ளுபடி விலக்குடன், வங்கி கடனிற்காக ஒரே விண்ணப்பதாரி அல்லது இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும், அதேபோல் அந்த உடைமையின் உரிமையாளர் அல்லது கூட்டு உரிமையாளராக இருத்தல் வேண்டும்.
எச்.டி.எஃப்.சியின் விமன் பவர் (Women Power)
எச்.டி.எஃப்.சி யின் இந்த திட்டம் சிறப்பு 9.85% வட்டி விகிதத்தில் பெண்களுக்கு கடன் வழங்குகிறது. ஹெச்.டி.எஃப் நிறுவனம் இந்த திட்டத்தை வருமான ஆதாரம் இல்லாமல் பெண்களுக்கு விரிவாக்கியுள்ளது.
9.85% இல், எச்.டி.எஃப்.சி யின் இந்த முன்முயற்சியானது பெண்கள் வாங்குவோருக்கு சிறப்பு வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் நிபந்தனைகளும் பாரத் ஸ்டேட் வங்கியின் நிபந்தனைகளை ஒத்திருந்தாலும், ஹெச்.டி.எஃப் நிறுவனம் இந்த திட்டத்தை வருமான ஆதாரம் இல்லாமல் பெண்களுக்கு விரிவாக்கியுள்ளது.
ஆஸ்பைரின் மஹில ஆவாஸ் கடன் (MALA)
ஆஸ்பியர் ஹோம் ஃபினான்ஸால் வழங்கப்படும், மஹிலஅவாஸ் கடன் என்பது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். ரூபாய் 2 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் கடனாக அளிக்கப்படும் இந்த திட்டம் சுய தொழில் மற்றும் குறைந்த அளவில் வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தங்களுக்கென ஒரு வீட்டை உரிமையாக்கி கொள்ள வாய்ப்பளிக்கிறது. 10% முதல் 13% வரை மாறுபடும் வட்டி விகிதத்தில் இந்த கடன் வழங்கப்படுகிறது.
டாடா ஹவுசிங்
பாரத ஸ்டேட் வங்கியுடன் டாட ஹவுசிங்க் இணைந்து பெண்களுக்கென பிரத்யேகமாக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சொத்து மதிப்பில் 20% சதவீதத்தை மட்டும் செலுத்தி வீட்டை பெற்று கொண்டு மீத தொகையை வீட்டினை பெற்ற பின் சுலப தவணைகளில் கட்டி கொள்ளலாம்.
மைக்ரோ ஹவுஸ் ஃபினான்ஸ் கார்ப்பரேஷனின் வீட்டு மானியம்
சரியான வருமான ஆவணங்கள் இல்லாத துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் மும்பையை சேர்ந்த மைக்ரோ ஹவுஸ் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் வீட்டு கடன் வழங்குகிறது.
அனைவருக்கும் வீட்டு திட்டத்தில் மானியம்
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை வழங்குவதோடு, பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 2.30 இலட்சம் வரையிலான சிறப்பு மானியம் வழங்கப்படுகிறது. அதே போல் வீட்டு ஒதுக்கீட்டின் போது, பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
முத்திரை தாள் வரியில் சலுகை
ஒரு வீட்டை வாங்கும் போது, அதை வாங்குவோர் பெண்களாக இருந்தால் பெரும்பாலும் முத்திரை தாள் வரியில் ஒரு சலுகையை தரப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முத்திரை தாள் வரி விதிக்கப்படும் போது, வழக்கமாக பெண்களுக்கு மாநில அரசுகள் குறைந்தபட்சம் 1-2 சதவீத சலுகைகளை அளிக்கின்றன. இது ஒரு சிறிய விகிதம் போல தோன்றலாம் ஆனால் சொத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் போது இது ஒரு பெரிய சேமிப்பாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT