Published : 17 Jan 2018 01:26 PM
Last Updated : 17 Jan 2018 01:26 PM
இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்பொழுதும் அலாதி பிரியம் உண்டு. காலம் காலமாக தங்கம் சேமிப்பது என்பது உயர் பொருளாதார நிலைக்கு ஒப்பிடப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வது விவேகமான முடிவாக கருதகப்பட்டது. ஆனால் தற்போதுள்ள ஏற்ற இறக்கமான சூழலில், இந்த புனிதமான மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்வது உகந்ததா என்ற கேள்வி எழாமலில்லை.
தங்கத்திற்கு நிகரான முதலீடு என்றால் ரியல் எஸ்டேட்டை சொல்லலாம். இந்த இரண்டையும் பல்வேறு அளருவுக்குள் ஒப்பிட்டு பார்க்கலாம்.
மூலதனம்
தங்கமோ சொத்தோ, எதில் முதலீடு செய்வது என்பது எவ்வளவு மூலதனம் கையிருப்பில் உள்ளது என்பதை பொறுத்துள்ளது.
சொத்து முதலீட்டுக்கு பெரும் தொகை தேவை. பொதுவாக மொத்த மதிப்பில் இருபது சதவிகிதம் முன்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை வங்கியில் வீட்டுக்கடனாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு சிறிய ஃப்ளாட் வாங்க வேண்டும் என்றாலும் சில லட்சங்கள் தேவைப்படும்.
தங்கத்தில் முதலீடு செய்ய குறைவான தொகையே போதுமானதாக இருக்கும்.
வருமானம்
வருமானத்தை கணக்கிடும் போது சொத்தின் மீது நிலையான வருமானம் பெற முடியும். இதுவே தங்கத்தின் மீது சந்தையின் நிலவரப்படி வருமானம் வேறுபடும்.
முதலீட்டு இயல்பு
ஏற்ற இறக்கம் சந்தை முதலீட்டாளாராகளை என்றுமே அச்சுறுத்தக் கூடியது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு ஒப்பீட்டுளவில் பார்க்கையில் நிலையானதே. தங்கத்தில் முதலீடு ஏற்ற இறக்கம் கொண்டது.
ஒப்பீடு | ரியல் எஸ்டேட் | தங்கம் |
முதலீட்டு தொகை | பெரும் தொகை | வசதிக்கேற்ப சி’றிய தொகை போதுமானது |
காலம் | நீண்ட காலத்திற்கானது | குறைந்த காலத்திற்கு உகந்தது |
வருமானம் | வாடகை மூலமாக நிலையான வருமானம் சாத்தியம் | சந்தை நிலவரப்படி ஏற்ற இறக்கம் கொண்டது |
பணமாக்குதல் | கடினம் | சுலபம் |
ஏற்ற இறக்கம் | குறைவு | அதிக வாய்ப்பு |
முதலீட்டு புரிதல் | சந்தை பற்றிய அறிவு மற்றும் புரிதல் | ஒளிவு மறைவற்ற தர முதலீடு |
வரி | கட்டமைக்கப்பட்ட வரி சலுகைகள் | மூலதன இலாப வரி |
பொருளாதார தாக்கம் | பொருளாதார வளர்ச்சிக்கு நலல்து | பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல |
முதலீட்டு காலம்
நீண்ட கால வருமானத்திற்கு ஏற்றது ரியல் எஸ்டேட். குறுகிய காலத்தை விட நீண்ட கால முதலீடு நன்மையை தரும். குறுகிய கால வருமானம் வேண்டுபவர்களுக்கு ஏற்றது தங்கத்தின் மீதான முதலீடு.
பணமாக்குதல்
முதலீடு செய்வதற்கு முன் அவசர தேவைக்கு எளிதாக பணமாக்க இயலுமா என்பதை கருத்தில் கொள்வது அவசியம். ரியல் எஸ்டேட் முதலீட்டில் இது சாத்தியப்படும் என்றாலும் தங்கம் மற்றும் .ETF ஆகியவற்றில் இது அதிகமாக சாத்தியப்படும்.
வரி விலக்கு
சொத்தின் மீதான முதலீட்டிற்கு கட்டமைக்கப்பட்ட வரி சலுகை உண்டு. இதுவே தங்கத்தின் மீதான வருமானத்தில் மூலதன இலாப வரி வசூலிக்கப்படும்.
பொருளாதார தாக்கம்
பிற நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிக மதிப்புடைய பணத்தில் இறக்குமதி செய்யும் போது நம் ரூபாயின் மதிப்பு குறையும். இதனால் மூலதன பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை ஏற்றம் அடையும். இதனால் தங்கத்தில் முதலீடு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ரியல் எஸ்டேட் மீதான முதலீடு பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
பொருளாதார நெருக்கடியின் பொழுது தங்கம் கையிருப்பு உதவும் என்றாலும் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள். பழைய சிந்தனை முறையை கையாள்வதை தவிர்த்து காலத்திற்கேற்ப முதலீடு முடிவு எடுப்பதே சலாச் சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT