Published : 27 Dec 2017 12:55 PM
Last Updated : 27 Dec 2017 12:55 PM
சமீபத்திய உலக வர்த்தக ஈர்ப்பு குறியீட்டின் படி நாட்டின் நான்காவது இடத்தில் சென்னை இடம் பெற்றுள்ளதோடு, ஆசிய பசிஃபிக் பகுதியில் இருபத்தி ஒன்பாதவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆட்டோமொபைல் மையமாக திகழ்ந்த சென்னை, கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் சீரான வளர்ச்சி கண்டுள்ளதோடு, நடப்பு ஆண்டில் இது 1,00,300 கோடியை தொடும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மனித வளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவை இந்த துறையின் அதிவேக வளர்ச்சிக்கு வித்திட்டது என்றே கூறலாம். இதனால் பல முன்னணி நிறுவனங்களும் சென்னையில் தங்களது வளர்ச்சி மையத்தை அமைக்க முனைப்பு காட்டின. இதன் விளைவாக இன்று சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் வளர்ந்துள்ளது. எழுபதுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் சென்னையில் உள்ளது, இதில் பெரும்பாலனவை OMR பகுதியில் அமைந்துள்ளது. இவற்றில் சில முன்னணி பூங்காக்களை காண்போம்.
சிப்காட் பூங்கா
சிறுசேரியில் அமைந்துள்ள சிப்காட் தொழில்நுட்ப பூங்கா 581.2 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்ற கழகத்தால் அமைக்கப்பட்ட இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா எனக் கூறப்படுகிறது..
டைடல் பார்க்
சென்னையின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் டைடல் பார்க் OMR சாலையில் அமைந்துள்ளது. 1,280,000 சதுரடியில் அமையப் பெற்றுள்ள இது இந்தியாவின் சிங்கிள் பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆகும். எட்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள டைடல் பார்க் 13 அடுக்குகள் கொண்டது. 650 பேர் அமரக்கூடிய அரங்கு, 16000 சதுரடி கொண்ட உணவு தளம் மற்றும் 1200 நான்கு சக்கர வாகனங்கள், 4000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் கொண்டது. இங்குள்ள நிறுவனங்கள் பல லட்ச வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பூங்கா தொழில்நுட்ப துறையின் வளர்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றே கூற வேண்டும்.
அசெண்டாஸ்
15 ஏக்கர் பரப்பளவில் இரண்டு மில்லியன் சதுரடி கொண்ட அதி நவீன தொழில்நுட்ப பூங்காவான அசன்டாஸ், டைடல் பார்க் அருகிலேயே உள்ளது. அலுவலங்கள் தவிர,54 அறைகள் கொண்ட சிறிய விடுதியும் இங்கு உள்ளது. ஐ டி நடைபாதை எனக் கூறப்படும் OMR சாலையிலிருந்து சற்றே தொலைவில் கத்திப்பரா சந்திப்பு அருகில் பிரம்மாண்டமான தொழில்நுட்ப பூங்கா உள்ளது.
ஒலிம்பியா டெக் பார்க்
ஒலிம்பியா பார்க் பல முதன்மைகளுக்கு பெயர் பெற்றது. 1.8 மில்லியன் சதுரடியில் அமைந்துள்ள முதல் பெரிய க்ரீன் கட்டிடம் இதுவாகும். சென்னையில் முதல் சிங்கிள் பெரிய கட்டிடமான இது அஷேர் தரநிலை பின்பற்றியுள்ள முதல் கட்டிடமுமாகும். STPI திட்டத்தின் கீழ் வரும் ஒலிம்பியா உலகத்தின் முதல் பெரிய க்ரீன் கட்டிடம் என்ற அந்தஸ்தையும் பெறும் என்றே தெரிகிறது. இங்கிருந்து சிறிய பயண தூரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் போரூர் அருகில் அமைந்துள்ளது நகரத்தின் மற்றுமொரு பிரம்மாண்ட தொழில்நுட்ப பூங்கா.
DLF ஐ டி பார்க்
42 ஏக்கர் பரப்பளவில் ஐந்து மில்லியன் சதுரடியில் அமைந்துள்ள DLF பூங்காவில் பல சர்வதேச மற்றும் இந்திய தொழில்நுட்ப அலுவலங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் தனது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடிய DLF, மேலும் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐநூறு கோடி முதலீட்டில் 1.6 மில்லியன் சதுரடியில் 3 ப்ளாக் கட்டப்படவுள்ளது.
பல ஐ டி நிறுவனங்கள் வேலை நீக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் இருப்பினும், இது போன்ற விரிவாக்க தகவல்கள் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. தொழில்முன்முனை நிறுவனங்கள் பல வளர்ச்சி பாதையை நோக்கி பயணிப்பதால், அலுவலக இடத்திற்கான தேவையும் அதிகரித்தே வருகிறது. வரும் ஆண்டில் அலுவலக இடத்திற்கான தேவை மிக அதிமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 3.5 மில்லியன் தொழில்நுட்ப SEZ சதுரடி பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் தனது இரண்டாம் கட்ட பணியில் OMR சாலை மற்றும் மணப்பாக்கம் ஆகிய தடங்களை சென்னையின் பிற பகுதிகளை இணைக்கும் திட்டத்தை தற்போது மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படும் என்பதால் நம் நகரம் வளர்ச்சி பாதையை நோக்கியே பயணிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT