Published : 27 Dec 2017 12:58 PM
Last Updated : 27 Dec 2017 12:58 PM

விழாக்கால  வீட்டுக்கடன்  சலுகைகள்

பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு வாங்குவது வாழ்நாள் கனவாக இருக்கும். உங்களுக்கு தெரிந்த நம்பகமான வங்கிகளையே வீட்டு கடனுக்கு சார்ந்திருக்கும் நீங்கள் பிற வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கிடைக்கும் கடன் பற்றி அறிந்துள்ளீர்களா?

பெரும்பாலும் வீட்டு கடன் வாங்குபவர்கள் விற்பனையாளர்களின் மயக்கும் பேச்சுக்களால், அபராத தொகை, வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம் போன்றவற்றை சரி வர தெரிந்து கொள்ளாமல் இறுதியில் வாங்கிய கடனை இரு மடங்காக திருப்பி தரும் நிலை ஏற்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் எதிர்பாராத நிலையில் ஒரு செலவு வந்தாலும் அதை எதிர்கொண்டு, வீட்டுக் கடனையும் அடைக்க சரியான கடன்  திட்டத்தை நீங்கள் எப்படி தேர்வு செய்யப்போகிறீர்கள்?

வீட்டு கடனுக்கான நிதி ஆதாரத்தை தேர்வு செய்தற்கு முன் கீழ்கண்ட அம்சங்களை ஆராய்ந்த பின் கடனுக்கு விண்ணப்பிப்பது நல்லது:

1. வட்டி விகிதம்

2. செயலாக்க கட்டணம்

3. கடன் ஒப்புதல் காலம்

4. அபராதம் மற்றும் தாமதமாக பணம் செலுத்துவதற்கான கட்டணம்

5. மாறுபடும் கடன் விதிமுறைகள் மற்றும் முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம்

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் நிலையான வட்டி (ஃபிக்ஸ்டு), மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங்), கலவை வட்டி (மிக்ஸ்டு) என முன்பு மூன்று வகைகள் இருந்தன. ஆனால், இப்போது கலவை வட்டி கிடையாது. நிலையான வட்டி, மாறுபடும் வட்டி என இரண்டு வட்டி விகிதங்கள் மட்டுமே.

மாறுபடும் வட்டி விகிதத்தைவிட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகமாக இருக்கும். அண்மைக் காலமாகப் பெரும்பாலான வங்கிகள் மாறுபடும் வட்டி விகிதத்தில் மட்டுமே கடன் வழங்குகின்றன. என்றாலும் நிலையான வட்டி விகிதமும் புழக்கத்தில் உள்ளது.

வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தால், நீண்ட கால கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டாலும், கடன் செலுத்தும் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

பண்டிகை காலத்தின் காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான  சலுகைகளை வழங்கும். நியாயமான வட்டி விகிதங்கள், வரையறுக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் பலப்பல நன்மைகள் உள்ள வீட்டுக் கடன் திட்டங்கள் குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடன்

கிட்டத்தட்ட  சந்தையில் 42% வாடிக்கையாளர்களை கொண்ட பாரத ஸ்டேட் வங்கி தான் வீட்டு கடன் விண்ணப்பதாரர்களின் தற்போதைய அபிமான வங்கியாக உள்ளது.

வட்டி விகிதம்: 8.35 முதல் 8.70%

விழா கால சலுகை: டிசம்பர் 2017 வரை செயலாக்க கட்டணம்  இலவசம். இந்த தொகை மற்றும் கால அளவைப் பொறுத்து ரூ .10000 முதல் ரூ .12000 வரை சேமிக்க உதவுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வீட்டு கடன்

கடன் வாங்குபவர்களுக்கு ஏற்றவாறு சந்தைப்படுத்தல் மற்றும் மாறுபடும் வீட்டு கடன் திட்டங்கள் போன்றவற்றால் 24 சதவிகித சந்தையுடன்  ஹெச்.டி.எஃப்.சி வங்கி இரண்டாவது மிகப் பெரிய வீட்டுக் கடன் வழங்கும் வங்கியாக மாறியுள்ளது.

வட்டி விகிதம்: 8.35% முதல் 8.55% வரை மற்றும் செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 0.5% அல்லது ரூ. 10,000 + சேவை வரி.

எல்.ஐ.சி. வீட்டு கடன்

நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள எல்.ஐ.சி கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான கடன் அனுமதி தர வழி வகை செய்துள்ளது.

வட்டி விகிதம்: 8.35% க்கு முதல் 8.60% வரை

ஐசிஐசிஐ  வங்கி

தனியார் வங்கியாக இருப்பதால், ஐசிஐசியின் வீட்டு கடன் செயலாக்கம் பொது வங்கிகளைவிட வேகமாக இருக்கும். இந்திய அரசாங்கத்தின் பிரதமரின் அனைவருக்கு வீடு திட்டத்தில் ஐசிஐசிஐ பங்கு வகிக்கிறது. அதனால் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர்  குறைந்த விலை வீடுகளை கட்ட உதவுகிறது. வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதை பொருத்து, திடீர் செலவுகளுக்கு ஓவர்டிராஃப்ட் வசதியையும் வழங்குகிறது.

வட்டி விகிதம்: 8.35 முதல் 8.80% வரை.

ஆக்சிஸ் வங்கி

மற்ற வங்கிகளை ஒப்பிடுகையில் சந்தையில் புதியதாக நுழைந்திருந்தாலும் தனது விளம்பரம் மற்றும் கடன் கொள்கையின் மூலம் ஆக்ஸிஸ் வங்கி நற்பெயர் பெற்றுள்ளது.

வட்டி விகிதம்: 8.35 முதல் 8.70% வரை.

தற்போது ஆக்சிஸ்  வங்கியின் புதிய வீட்டுக் கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கான 12 சமமான மாத தவணையை தள்ளுபடி செய்கிறது, இது நான்காவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது மாதங்களில் திரும்ப செலுத்தும் கடனின் அடிப்படையில் தள்ளுபடி செய்கிறது.

ஆக்சிஸ், 4 , 8 மற்றும் 12வது வருடங்களில், வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதத்துக்கு சமமான மாத தவணையை தள்ளுபடி செய்கிறது. இதன் மூலம் கடன் திரும்ப செலுத்தும் காலம் குறைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x