Last Updated : 29 Oct, 2017 12:32 PM

 

Published : 29 Oct 2017 12:32 PM
Last Updated : 29 Oct 2017 12:32 PM

செல்ஃபியால் சிக்கியவர்கள்

சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு எங்கேயும் எப்போதும் அச்சுறுத்தல் இருந்தபடிதான் இருக்கிறது. ஆனால், தன்னை இப்படி கேலி செய்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நோவா ஜன்ஸ்மா. இவர் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டம் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி.

15chlrd_ph 4 ‘பேபி’ என அழைத்தவர்.

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் சாலையில் தன்னை கிண்டல் செய்தவர்களையும் தகாத வார்த்தைகள் பேசியவர்களையும் தன் செல்போனில் ‘செல்ஃபி’ படம் எடுத்தார். அந்தப் ஒளிப்படங்களை #dearcatcallers எனத் தலைப்பிட்டு, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்தார்.

நோவாவைக் கிண்டல் செய்தவர்கள் எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பெண்களைக் கிண்டல், கேலி செய்வது ஒரு சிறந்த கேளிக்கை நிகழ்வு என்பதுபோல் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார்கள்.

சாலைகளில் செல்லும் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்வோரைத் தண்டிக்கச் சிறப்புச் சட்டம் நெதர்லாந்து நாட்டில் அடுத்த ஆண்டு முதல் கொண்டுவரப்படவுள்ளது. இப்படிப் பெண்களைச் சீண்டுபவர்களுக்கு 220 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

நோவாவின் ஒளிப்படப் பதிவைத் தொடர்ந்து இதுபோன்ற சட்டத்தை மற்ற நாடுகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது உலக அளவில் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x