Last Updated : 22 Oct, 2017 12:46 PM

 

Published : 22 Oct 2017 12:46 PM
Last Updated : 22 Oct 2017 12:46 PM

பேசும் படம்: துயரம், மகிழ்ச்சி, பெருமிதம்

கடந்த வாரம் உலகெங்கும் பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் உள்ளிட்ட உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியைகள் மூவர், முகத்தில் வண்ணம் பூசியபடி தீபாவளி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

 

 ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் பல தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளது.

 

 நேபாள நாட்டில் திஹார் திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் சாமந்திப் பூவை அறுவடை செய்யும் பெண் விவசாயி.

 

தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகு சென்னை நகரில் பல பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளித்தன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு அருகில் சாலையைப் பார்த்து வண்டி ஓட்ட முடியாத அளவுக்குப் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. | படம்: ஆர்.ரவீந்திரன்

 

 தேசியப் பெண்கள் கூடைப்பந்து அணியின் மூத்த விளையாட்டு வீரர் அனிதா பால்துரை. இவர் 16 வயதுக்கு உட்பட்ட ஆசிய மகளிர் கூடைப்பந்து கோப்பைக்காக விளையாடும் இந்திய அணிக்கு உதவிப் பயிற்சியாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். | படம்: கே.முரளி குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x