Last Updated : 10 Sep, 2017 10:10 AM

 

Published : 10 Sep 2017 10:10 AM
Last Updated : 10 Sep 2017 10:10 AM

சேனல் சிப்ஸ்: ஆர்த்தியின் அவதாரம்

தூர்தர்ஷன் பொதிகைத் தொலைக்காட்சியில் ‘மேட்னி ஷோ’, ‘மலரும் நினைவுகள்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அனைவரது பாராட்டையும் அள்ளிவருகிறார் ‘சின்னச் சின்ன ஆசை’ புகழ் ஆர்த்தி.

“பொதிகைத் தொலைக்காட்சிக்குள்ள வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இப்போ எல்லாரும் நேரடி நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் என்னை மாதிரி நிறைய தொகுப்பாளர்கள் வந்து நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பிச்சுட்டோம். செவ்வாய்க்கிழமைதோறும் ‘மேட்னி ஷோ’ நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ, திருநங்கைகள் சிறப்பு நிகழ்ச்சி என்று வித்தியாசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி. அடுத்து புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கும் வேலையில் எங்கள் குழு இறங்கியுள்ளது. அதேபோல மூத்த திரைப்படைப்பாளிகளின் சினிமா, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியையும் நடத்திட்டு இருக்கோம்” என்கிறார் ஆர்த்தி.

கலகல கேம் ஷோ

வா

னவில் தொலைக்காட்சியில் சினி மேக்ஸ், மேட் இன் ஹாலிவுட், சில்வர்ஸ் ஸ்கிரீன்ஸ் என்று அடுக்கடுக்காக சினிமா நிகழ்ச்சிகளை வழங்கிவரும் ஜீவிதா, தற்போது கேப்டன் தொலைக்காட்சியில் ‘டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.

“கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் தகவல்கள்வரைக்கும் வானவில் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க சினிமா நிகழ்ச்சிகளை அள்ளி வழங்குவது என்னோட வேலை. சினிமா என்றால் சும்மா விட்டுவிடுவோமா? நானும் சலிக்காமல் தகவல்களைக் கொடுத்துக்கிட்டே இருப்பேன். இந்த ஓட்டத்தில் இப்போது கேப்டன் தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோவும் இணைந்திருக்கிறது. ‘டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என்ற இந்த நிகழ்ச்சி மூன்று பிரிவுகளாக நடைபெறும். முழுக்க இளைஞர்களுக்கான நிகழ்ச்சியாக அமைந்துள்ள இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். விளையாட்டில் சில இடங்கள் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருப்பதால் நான் தப்பித்துக்கொள்வேன். ஷோவுக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் மாட்டிக்கொள்வார்கள். ஆனால், அதுதான் நிகழ்ச்சியை கலகலப்பாக வைத்திருக்கிறது’’ என்கிறார் ஜீவிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x