Published : 25 Dec 2016 02:55 PM
Last Updated : 25 Dec 2016 02:55 PM
வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘உப்பு புளி மிளகா’ நிகழ்ச்சி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிரியதர்ஷினி, “இந்த நிகழ்ச்சியை மூணு பகுதியா நடத்துறோம். முதல் பகுதி கைப்பக்குவமும் தேர்ந்த சமையல் அனுபவமும் கொண்ட இல்லத்தரசிகளுக்கானது. அவங்க வீட்டுக்கே போய் ஷூட்டிங் நடத்துறோம். ரெண்டாவது பகுதியில் சமையல் கலை நிபுணரோட சமையல் இடம்பெறும். மூணாவது பகுதியில் சமையல் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரோட சமையல் குறிப்புகள் இடம்பெறும். அறுசுவை உணவின் மகத்துவத்தை இந்தத் தலைமுறை உணரணும். அதுக்காக நடத்தப்படுற நிகழ்ச்சிதான் இது!’’ என்கிறார்.
நடிப்பும் படிப்பும்
விதவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்கி அசத்தலான தொகுப்பாளினி என்று பெயர் எடுத்த பவித்ரா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மெல்லத் திறந்தது கதவு’ ஆகிய தொடர்களில் நடித்துப் பாராட்டை அள்ளிவருகிறார்.
“சரவணன் மீனாட்சி என்னோட சின்னத்திரை கேரியர்ல பிரேக் கொடுத்துக்கிட்டிருக்குற சீரியல். ராஜிங்கிற ரோல்ல மாற்றுத் திறனாளி பெண்ணா நடிக்கிறேன். முதல் ரெண்டு வாரம் இந்த கேரக்டருக்குள்ள போவதற்கே ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இப்போ செல்போன் முழுக்க பாராட்டா குவியுது. இதுக்கு நேர் எதிராக ‘மெல்லத் திறந்தது கதவு’ தொடர்ல நகரத்துல இருக்குற மாடர்ன் பெண் கதாபாத்திரம். மனசுக்குப் பிடிச்ச மாதிரியான ரோல்ல நடிச்சிக்கிட்டிருக்குற சந்தோஷத்தை இரட்டிப்பாக்குற மாதிரி என்னோட எம்.பி.ஏ. படிப்பையும் சீக்கிரமே முடிக்கப் போறேன். அடுத்து எம். ஃபில். பண்ணனும். நடிப்பும் படிப்பும்தான் நம்ம வாழ்க்கை!’’ என்கிறார் பவித்ரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT