Published : 18 Sep 2022 09:05 AM
Last Updated : 18 Sep 2022 09:05 AM
எண்ணிக்கையில் ஏறக்குறைய சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளிலும் அதற்கான விகிதாச்சாரத்தை அளிக்க வேண்டும். சில நேரம் 50 சதவீதத்தைக் காட்டிலும் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதை எதிர்பாலினர்கள் விரும்பவில்லை என்பதற்கான காரணம், ஏற்கெனவே இங்கே நிலவிவரும் வேலையில்லா நெருக்கடி நிலைதான். வேலையில்லாத் துயரத்தை ஆண்கள் மட்டும் அனுபவிக்கவில்லை, பெண்களும் சேர்ந்தே அனுபவிக்கிறார்கள். மற்றபடி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இத்தகைய ஆட்சேபணைகள் எழக்கூடும் என்பதெல்லாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததும்கூடத்தான்.
1970இல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த பதி சந்திரசேகர் சென்னை வானொலிக்காக, தந்தை பெரியாரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் முக்கிய நோக்கம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்படுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே, 1920-களில் அதன் அவசியத்தைப் பேசியவர் பெரியார் என்பதன் அடிப்படையில் அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதன் ஒருபகுதியாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதமும் இடம்பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT