Published : 14 May 2022 04:23 PM
Last Updated : 14 May 2022 04:23 PM
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கிராமப்புறக் காவல் துறைக்கு பெண் காவலர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் பிரிவில் ஒரு பெண் விண்ணப்பித்துள்ளார்.
எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு ஆகியவற்றில் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், மருத்துவச் சோதனையில் அவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அவருக்கு கருப்பையும் கரு முட்டையும் இல்லை. அவருக்கு ஆண், பெண் இரு பாலருக்குமான குரோமோசோம்களும் இருந்திருக்கின்றன. இதனால் அவர் ஆண் என அந்த மருத்துவப் பரிசோதனை முடிவு கொடுக்கப்பட்டது.
இதனால் பெண் என்னும் அடிப்படையில் அவர் இந்தத் தேர்வில் தகுதியற்றவர் ஆகிறார். ஆனால், அவர் இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். ரேவதி மோகிதே தேரே, மாதவ் ஜம்தார் ஆகிய நீதிபதிகள் இருவர் அடங்கி அமர்வு இந்த மனுவை ஏற்றுக்கொண்டது.
மனுதாரர், தான் பிறந்ததிலிருந்து ஒரு பெண்ணாகத்தான் வாழ்ந்திருக்கிறேன். எனது கல்விச் சான்றிதழிலிருந்து எல்லாவற்றிலும் ஒரு பெண் என்று பெண் பெயரில்தான் இருக்கின்றன. இந்த உடல் ரீதியான பிரச்சினைகள் எனக்குத் தெரியாது. அதனால் என்னை நிராகரிப்பது சரியாகாது என முறையிட்டுள்ளார்.
நீதிமன்ற அமர்வில் அரசு தரப்பு வழக்கறிஞர் கருணை அடிப்படையில் அவர் பணியில் அமர்த்த அரசு முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், காவல் பணி அல்லாத பணியில் அவர் அமர்த்தப்படுவார் எனச் சொன்னார். இரு மாதங்களுக்குள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT