Published : 28 Feb 2016 12:28 PM
Last Updated : 28 Feb 2016 12:28 PM

குறிப்புகள் பலவிதம்: வெண்ணையில் உப்பு

# தேங்காய் சட்னி மணமும் சுவையும் கூடி இருக்க பச்சை மிளகாயையும், ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் எண்ணெயில் வறுத்துப் போட்டால் மணம் வீட்டை தூக்கும்.

# ரொட்டி, பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்தால், கையில் சிறிதுகூட மாவு ஒட்டாமல் பிசையலாம்.

# வெண்டைக்காய் கறி செய்யும்போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொரமொரப்பாய் சுவையாய் இருக்கும்.

# வெண்ணெயில் உப்பைத் தூவிவிட்டால், நாளானாலும் கெடாமல் இருக்கும்.

# வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால், கூட்டு, கறிகளை அடுப்பிலிருந்து இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

# பக்கோடா மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் சேர்த்தால் பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.

# கேரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீட்ரூட் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை சூப் வைத்து தினசரி சாப்பிட்டால் உடலுக்கும் மூளைக்கும் நல்லது.

# சாப்பிட்டவுடன் ஜீரணமாகாமல் இருப்பதுபோல் இருந்தால், சிறிது ஜீரகத்தை வாயில் போட்டு மென்று சிறிது வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணமாகிவிடும்.

# கொத்தமல்லி தழையை சிறிது நெய்யில் வதக்கி சட்னி செய்து சாப்பிட்டால், உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

# அரிசி களைந்த கழுநீரில் பருப்பு வேகவைத்தால், சாம்பார் மிகவும் சுவையாக இருப்பதோடு, பருப்பும் சீக்கிரமாக வேகும்.

# நெய் காய்ச்சும்போது, சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் வாசனையாக இருக்கும்.

# அடைக்கு அரைக்கும்போது, ஒரு கேரட்டை நறுக்கிப் போட்டு அரைத்து அடை செய்தால், சுவையாக இருக்கும்.

# மெல்லிய இஞ்சித் துண்டை மோரில் போட்டால் மோர் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x