Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

இது புதுசு: அவனுக்குப் பதில் அவர்

ஒரு பதவி வகிப்பவரையோ, தொழில் செய்கிறவரையோ கலைஞரையோ குறிப்பிடும் ஆங்கிலச்சொற்கள் பெரும்பாலும் ஆணைக் குறிப்பதாகவோ ஆணை மையப்படுத்தியதாகவோதான் இருக்கின்றன. சமூகத்தில் பாலினப் பாகுபாடும் ஆணாதிக்கமும் மேலோங்க இப்படியான சொற்களின் பயன்பாடும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதை மாற்றி, அதற்கு மாற்றாகப் பாலின அடையாளமற்ற சொற்களை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது.

கூகுள் டாக்குமென்ட்டில் நாம் Chairman என்று டைப் செய்தால் அதற்குப் பதிலாக chair person என்கிற சொல்லை கூகுள் நமக்குப் பரிந்துரைக்கும். அதேபோல் Policeman என்று டைப் செய்தால் Police officer என்கிற சொல்லைப் பயன்படுத்துமாறு அறிவிப்பு வரும்.

Mankind – Humankind

Man hours – Human hours

Mailman – Mail person

இப்படிச் சொற்களில் குடியிருக்கும் ஆணாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பாலினப் பாகுபாட்டைக் களைவதுடன் சமத்துவச் சிந்தனையை வளர்க்க முடியும் என்று கூகுள் நம்புகிறது. தொழில்நுட்பத்துடன் சேர்ந்து அதைப் பயன்படுத்துவோரும் மாறினால் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x