Published : 14 Dec 2015 10:17 AM
Last Updated : 14 Dec 2015 10:17 AM
l மழையால் ஏற்பட்ட தொடர் விடுமுறைக்குப் பிறகு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் முன்னெச்சரிக்கையாக இருப்பது குழந்தைகளின் உடல் நலத்துக்கு நல்லது.
l வகுப்பறையில் தரை ஈரமாக இருந்தால் குழந்தையை தரையில் அமர்ந்து விளையாட வேண்டாம் என்று சொல்லியனுப்புங்கள்.
l பள்ளிக்குப் போகிற வழியில் ஏதேனும் மின்கம்பிகள் அறுந்து விழுந்திருக்கிறதா என்று பார்த்து நடக்கச் சொல்லுங்கள்.
l குழந்தைகளுக்கு உலர்வான ஆடைகளையும் காலுறையையும் அணிவித்து அனுப்புங்கள்.
l சூடான குடிநீரை வீட்டிலிருந்து கொடுத்தனுப்புங்கள். சில நாட்களுக்குப் பள்ளி குழாயில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். தொடர் மழையால் தண்ணீர் தொட்டிகளைச் சரிவர சுத்தம் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.
l குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு வகைகளையும் திண்பண்டங்களையும் கொடுத்தனுப்புங்கள். புட்டிகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத்தீனி வகைகளைத் தவிருங்கள். சுண்டல், பயறு, பழக் கலவை ஆகியவற்றைக் கொடுத்தனுப்பலாம்.
- தென்றல், ராணிப்பேட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT