Published : 13 Sep 2015 12:44 PM
Last Updated : 13 Sep 2015 12:44 PM

குறிப்புகள் பலவிதம்: பல் வலி போக்கும் கொய்யா இலை

* ரவாலாடு செய்ய ரவையை வறுத்து, அரைத்துச் செய்வார்கள். அது பார்ப்பதற்கு மாலாடு போல இருக்கும். அதற்குப் பதில் சன்னமாக இருக்கும் ரவையை வறுத்து,சர்க்கரையை மட்டும் அரைத்துச் செய்தால் நன்றாக இருக்கும்.

* மைதாவை ஆவியில் வேகவைத்து, கட்டியில்லாமல் உதிர்த்து ஆறவைத்து அரிசிமாவுக்குப் பதில் பலகாரங்களுக்குப் பயன்படுத்தலாம்.

* சமையலில் அடிக்கடி இஞ்சி - பூண்டு விழுது பயன்படுத்துவீர்களா? தோல் சீவி நறுக்கிய இஞ்சி ஒன்றரை கப்புடன் தோலுரித்த பூண்டு ஒரு கப் சேர்த்து அவற்றுடன் கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து விழுதாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையானபோது சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

* மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். எலும்பு, பற்கள் உறுதிப்படும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒரு சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பு சதை போடுவதைத் தடுக்கலாம்.

* புதினா துவையல், வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து.

* எலுமிச்சை சாறு தேன் கலந்து பருக வறட்டு இருமல் குணமாகும்.

* பல் வலிக்கும் போது கொய்யா இலைகளை மென்று, வலிக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால் வலி குறையும்.

- உமாராணி, தர்மபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x