Published : 05 Jul 2020 09:00 AM
Last Updated : 05 Jul 2020 09:00 AM
பள்ளி ஆசிரியையான நான், அன்றாடம் அதிகாலையில் எழுந்து அவசர அவசர மாகச் சமைத்து இரு பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பள்ளிக்குச் செல்வதற்குள் வீடே போர்க்களமாகிவிடும்.
இப்போது அப்படியான பரபரப்பு இல்லை என்பதால் பிள்ளைகள் நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி போன்றவற்றை விளையாடுகிறார்கள். என் கணவரும் சமையலில் எனக்கு உதவ, எங்கள் மகளோ யூடியூபில் புதுவிதமான சமையல் முறைகளைப் பார்த்து விதவிதமாகச் சமைத்து அசத்துகிறாள். மனம்விட்டுப் பேச, பழக, அன்பைப் பரிமாற, உணர்வுகளைப் புரிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இந்த ஊரடங்கைக் கருதுகிறேன்.
புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங் களைப் படிப்பதுடன் உறவினர்களோடு அவ்வப்போது கைபேசியில் பேசுகிறோம். உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்னும் விழிப்புணர்வைப் பெற்றுச் செயல்படுகிற நேரமாகவும் இது அமைந்திருக்கிறது.
வெளியே போய்ச் செய்ய வேண்டிய பணியைச் செய்ய இயலாமல் போகிறது, பள்ளி திறக்கப்படாமல் இருக்கிறது எனும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் இணையவழி வகுப்புகள் நடைபெற்றாலும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் உரையாடிப் படிக்கிற அனுபவம் அவசியம் அல்லவா? அதற்காகக் காத்திருக்கிறோம்.
- சங்கீதா சுரேஷ், தர்மபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT