Published : 14 Jun 2015 01:13 PM
Last Updated : 14 Jun 2015 01:13 PM
கர்ப்பிணிப் பெண்கள், வயிற்றுக்குள் இருக்கும் தங்கள் குழந்தையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் பார்க்கிற பரவசத்துக்கு இணையில்லை. கருவில் இருக்கும் குழந்தையின் அசைவுகளைச் சி.டி.யாகப் பதிவு செய்து ரசிக்கிறவர்களும் உண்டு. ஆனால் பார்வையற்ற பெண்கள் இந்த மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பார்கள்? அவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது அச்சிடப்பட்ட 3டி அல்ட்ரா சவுண்ட். இந்தத் தொழில்நுட்பம் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உடலமைப்பை அப்படியே அச்சு அசலாகப் பிரதியெடுக்கலாம்.
பார்வையற்ற ஒரு பெண், கருவில் இருக்கும் தன் குழந்தையின் முகம், பிஞ்சு கைகள் மற்றும் கால்களைத் தொட்டுப் பார்க்கும் அற்புதத் தருணத்தைப் பதிவுசெய்து ஒரு வீடியோ பதிவு வெளியாகியிருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் அது பார்க்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பமும் தாய்மை உணர்வும் சங்கமிக்கும் இந்த 3டி அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்துக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை இனிக் காத்திருக்கத் தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையைத் தொட்டுப் பார்த்து மகிழலாம்.
- வை.விண்மதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT