Published : 28 Jun 2015 02:26 PM
Last Updated : 28 Jun 2015 02:26 PM
கொடுத்த ஊக்கம்தான் ஐம்பது வயதைக் கடந்த பிறகும் வசந்தியை உற்சாகமாக வைத்துக்கொண்டிருக்கிறது. மதுரையில் இருக்கும் வசந்தியின் வீட்டில் திரும்பிய திசையெங்கும் கலைப் பொருட்களின் காட்சி. மாக்ரமி நூலில் செய்யப்பட்ட சிறு ஊஞ்சலில் தொட்டிச் செடி தொங்க, க்ரோஷே இழையில் செய்யப்பட்ட கலைப் பொருட்கள், ஃபேன்ஸி கைப்பைகள், செல்போன் கவர்கள் என்று ஒவ்வொன்றும் அழகும் பயனும் நிறைந்திருக்கின்றன.
“நான் பர்மாவில் பிறந்தேன். எனக்கு இரண்டு வயதாகும்போது போர் காரணமாக இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தோம். நாங்கள் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் எங்கள் அப்பாவுக்குப் பிடிக்காது. ‘பெண்கள் ஏதாவது கைத்தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் தரும்’ என்று அவர் அடிக்கடி சொல்வார். பள்ளி விடுமுறை நாட்களில் பகலில் தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உருப்படியாக ஏதாவது கற்றுக்கொள்ளச் சொல்வார்” என்று தன் தந்தை தந்த உத்வேகத்தைச் சொல்கிறார் வசந்தி.

வசந்தியின் அம்மாவுக்குத் தையல் கலையில் ஈடுபாடு உண்டு. அதனால் அவரிடமிருந்து தையல், எம்ப்ராய்டரி ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். பள்ளி நாட்களில் பழகிய கைவினைக் கலைகளைத் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்தார்.
“எங்களுக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்துதான் என் மகள் பிறந்தாள். அதுவரை என்னைச் சூழ்ந்திருந்த தனிமையை இந்தக் கலைகளே போக்கின” என்று சொல்லும் வசந்தி, புதுப்புதுக் கலைகளைத் தேடித் தேடி கற்றுக்கொள்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்புதான் க்ரோஷே இழையில் கலைப் பொருட்கள் செய்வதைக் கற்றுக்கொண்டார்.
“எதையும் கற்றுக்கொள்ள வயது தடையில்லை. புதிதாக ஒரு கலையைக் கற்றுத்தருகிற யாருடைய அறிமுகமாவது எனக்குக் கிடைத்துவிட்டால் போதும். உடனே அவர்களிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொள்வேன்” என்கிறார் வசந்தி. தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் யாதவா கல்லூரியில் பகுதி நேரமாகக் கைவினைக் கலைகளுக்குப் பயிற்சியளித்திருக்கிறார்.
“என் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் கைகளில் நடுக்கம் அதிகமாக இருக்கிறது. அப்போதும் விடாமல் என்னிடம் க்ரோஷே கலையைக் கற்றுக்கொள்கிறார். ஆனால் இன்றைய இளம் பெண்களுக்குக் கலைகளைக் கற்றுக்கொள்வதில் அவ்வளவு ஆர்வமில்லை. டி.வி., ஸ்மார்ட் போன் என்று பொழுதைக் கழிக்கிறார்களே தவிர ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முன்வருவதில்லை” என்று சொல்லும் வசந்தி, தான் செய்யும் கலைப் பொருட்களை ஸ்டால்களில் விற்பனை செய்கிறார். பரிசுப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்.
வசந்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT